ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற – மாற்றங்கள் | அலகு 7 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மாகாண நகரங்களின் நிர்வாகம் | 8th Social Science : History : Chapter 7 : Urban changes during the British period
மாகாண நகரங்களின்
நிர்வாகம்
18ஆம் நூற்றாண்டின் முடிவில் நாடாளுமன்றத்தின் ஒரு
சட்டம் தலைமை ஆளுநருக்கு மாகாண நகரங்களில் அமைதியை ஏற்படுத்த நீதிபதிகளை நியமிக்கும்
அதிகாரத்தை அளித்தது. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு மூன்று மாகாண நகரங்களில் அரசாங்க
அமைப்பு உருவாக்கப்பட்டது. அது பெரிய மாநகராட்சிகள் போல தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்,
சுதந்திரமான வலிமை பெற்ற நிர்வாக அமைப்பு , கணக்குகளைச் சரிபார்க்கப் போதுமான ஏற்பாடுகள்,
பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கான சட்டபூர்வ பாதுகாப்புகள், சுகாதாரம், நீர் வழங்கல்
மற்றும் வருவாய் வசூல் போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
