அலகு 1 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - ஐரோப்பியர்களின் வருகை | 8th Social Science : History : Chapter 1 : Advent of the Europeans
வரலாறு
அலகு - 1
ஐரோப்பியர்களின் வருகை

கற்றலின்
நோக்கங்கள்
>நவீன இந்திய வரலாற்று ஆதாரங்களின் வகைகள் பற்றி அறிதல்
>இந்தியாவில் போர்ச்சுகீசியரின் வர்த்தகத்தை புரிந்துகொள்ளுதல்
>இந்தியாவில் போர்ச்சுகீசியர்கள் மற்றும் டச்சுக்காரர்கள் ஆதிக்கத்
தாக்கத்தை புரிந்து கொள்ளுதல்
>டென்மார்க்கின் காலனி குடியேற்றங்களை பற்றி அறிதல்
>ஆங்கில மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனங்களின் வருகை மற்றும்
நிலைப்பாடுகளை அறிதல்
அறிமுகம்
18 மற்றும்
19ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவிற்கு வருகை புரிந்த பல வெளிநாட்டு பயணிகள், வர்த்தகர்கள்,
சமய பரப்பாளர்கள் மற்றும் பொதுப்பணி ஊழியர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாங்கள்
பெற்ற அனுபவங்களையும், உணர்வுகளையும் விட்டுச்சென்றுள்ளனர். நவீன கால வரலாற்று நிகழ்வுகளை
அறிய சர்வதேச, தேசிய மற்றும் வட்டார அளவில் நமக்கு ஏராளமான ஆதாரங்கள் கிடைக்கின்றன.