Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | வேளாண்மை - தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 11 : தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

வேளாண்மை - தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

வரலாற்று அடிப்படையில் தமிழகம் ஒரு வேளாண் மாநிலமாகும். தற்போது தமிழகத்தில் ஏழு வேளாண் காலநிலை மண்டலங்கள் (AGRO CLIMATIC ZONES) உள்ளது. இங்கு பல்வேறு வகையான மண் வளம் இருப்பதால் பழங்கள், காற்கறிகள், மசாலா பொருட்கள், தோட்டப் பயிர், மலர்கள் மற்றும் மருத்துவத் தாவரங்கள் போன்றவை பயிரிட ஏதுவாக உள்ளளது.

வேளாண்மை

வரலாற்று அடிப்படையில் தமிழகம் ஒரு வேளாண் மாநிலமாகும். தற்போது தமிழகத்தில் ஏழு வேளாண் காலநிலை மண்டலங்கள் (AGRO CLIMATIC ZONES) உள்ளது. இங்கு பல்வேறு வகையான மண் வளம் இருப்பதால் பழங்கள், காற்கறிகள், மசாலா பொருட்கள், தோட்டப் பயிர், மலர்கள் மற்றும் மருத்துவத் தாவரங்கள் போன்றவை பயிரிட ஏதுவாக உள்ளளது. தமிழகம் தே சிய உதிரி பூக்கள் உற்பத்தியில் முதலிடத்திலும் பழங்கள் உற்பத்தியில் மூன்றாமிடத்திலும் உள்ளது. தமிழகத்தில் வேளாண்மையானது மிக அதிக அளவில் ஆற்றுநீர் மற்றும் பருவமழையை நம்பியுள்ளது. தற்போது இந்தியாவின் நெல் உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக மேற்கு வங்கத்திற்கு அடுத்ததாக உள்ளது. மிகப்பெரிய அளவில் மஞ்சள் உற்பத்தி செய்யும் மாநிலமாகவும் உள்ளது. கம்பு, சோளம், நிலக்கடலை, எண்ணெய் வித்துக்கள், கரும்பு போன்றவை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ளது. தோட்டப் பயிர் வாழை, தேங்காய் உற்பத்தியில் முதலிடத்திலும், இரப்பர் உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும், மிளகு உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், கரும்பு உற்பத்தியில் நான்காவது இடத்திலும் உள்ளது.

அனைத்து வகைப் பயிர்களுக்கான மொத்த உற்பத்திப் பரப்பு 2013-14ஆம் ஆண்டில் 58.97 இலட்சம் ஹெக்டேர்களாக உள்ளது. உணவு தானிய உற்பத்திப் பரப்பு 72.9% ஆகவும் பிற பயிர்களுக்கான உற்பத்திப் பரப்பு 27.1% ஆகவும் உள்ளது. உணவுப் பயிர்களில் நெல் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிற பயிர்களில் கடலை மற்றும் தேங்காய் முக்கியப்பங்கு வகிக்கிறது.

உற்பத்தி தொகுதி



1. உணவு தானிய உற்பத்தி


உணவு தானிய உற்பத்தியில் நெல் உற்பத்தி 79.49 இலட்சம் டன் (2014-15) உற்பத்தியோடு முதலிடம் பெற்றுள்ளது. சிறு தானியங்கள் 40.79 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பருப்பு உற்பத்தி 2011-12ல் 3.59 இலட்சம் டன்னிலிருந்து 2014-15ல் 7.67 இலட்சம் டன்னாக குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. 2015-16ல் பருவ மழை பொய்த்ததால் உற்பத்தி சிறிதளவு குறைந்தது.


2. இந்திய அளவில் உற்பத்தித்திறனில் தமிழகத்தின் நிலை

தமிழக அரசு வேளாண் விளை பொருள் உற்பத்திக்கும், உற்பத்தித் திறனுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் காரணமாக தமிழகம் உணவு தானியங்கள் மற்றும் பிற தானியங்களின் உற்பத்தித் திறனில் முதன்மை மாநிலமாக உள்ளது. மக்காச் சோளம், கம்பு, நிலக்கடலை, எண்ணெய் வித்துக்கள், பருத்தி ஆகியவற்றின் உற்பத்தியில் முதலிடத்திலும் நெய், தேங்காய் ஆகியவற்றில் இரண்டாவது இடத்திலும், கரும்பு, சூரியகாந்தி, சோளம் ஆகியவற்றில் மூன்றாவது இடத்திலும் மிளிர்கிறது.

அட்டவணை 11.8- தேசிய அளவில் தமிழ்நாட்டின் உற்பத்தித்திறன் நிலை


 (ஆதாரம்:தமிழக அரசின் வேளாண்மைத் துறை கொள்கை விளக்க குறிப்பு 2017-18)

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 11 : தமிழ்நாட்டுப் பொருளாதாரம்