பருவம் 3 இயல் 4 | 4 ஆம் வகுப்பு தமிழ் - ஆனந்தம் விளையும் பூமியடி | 4th Tamil : Term 3 Chapter 4 : Anandam vilaiyum Bhoomiyadi
4. ஆனந்தம் விளையும் பூமியடி


கும்மியடி பெண்ணே கும்மியடி - சுகம்
கோடி விளைந்திடக் கும்மியடி
நமது இன்னல் போனதடி - என்று
நெஞ்சம் நெகிழ்ந்தே கும்மியடி
பாவலர் புகழும் பூமியடி- நம்
பாரதம் என்னும் தேசமடி
ஆனந்தம் விளையும் பூமியடி- புகழ்
ஆரம் கொண்ட தேசமடி
அறிவில் சிறந்த தேசமடி-நல்
அறிஞர்கள் வாழும் பூமியடி
மலையாய் உயர்ந்த தேசமடி- பெரும்
வளமும் கொண்ட பூமியடி
இந்தியா நமது தேசமடி- நீ
இணைந்து ஒன்றாய் வாழ்ந்திடவே
மண்ணைத் தாயாய் போற்றிட்டி-உன்
கண்ணைப் போலக் காத்திட்டி