Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | விரிவான விடையளிக்கவும்

நிலவரைபடத் திறன்கள் | புவியியல் | சமூக அறிவியல் - விரிவான விடையளிக்கவும் | 9th Social Science : Geography: Mapping Skills

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலவரைபடத் திறன்கள்

விரிவான விடையளிக்கவும்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலவரைபடத் திறன்கள் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : விரிவான விடையளிக்கவும்

VII. விரிவான விடையளிக்கவும்


1. நிலவரைபடங்களில் அளவை என்பதன் பொருள் என்ன? அதன் வகைகளை விளக்குக.

விடை:

அளவை:

அளவையைக் கொண்டு வரைவதன் மூலம் முழுப் புவியையும் ஒரு காகிதத்தில் காட்ட முடியும். அளவை என்பது நிலவரைபடத்தில் இரு புள்ளிகளுக்கும் புவிப்பரப்பில் அதே இரு புள்ளிகளுக்கும் இடையிலுள்ள தூரவிகிதம் ஆகும். அளவைகள் மூன்று முறைகளில் நிலவரைபடத்தில் காட்டப்படுகின்றன.

சொல்லளவை முறை:

நிலவரைபடத்திலுள்ள தூரம் மற்றும் புவியின் உண்மையான தூரத்தினை ஒப்பீடு செய்து சொற்களில் குறிப்பிடுவது சொல்லளவை முறையாகும். அதாவது ஒரு சென்டிமீட்டர் பத்து கிலோமீட்டர்க்குச் சமம். இது 1 செ.மீ = 10 கி.மீ என்று குறிக்கப்படுகிறது.

பிரதிபின்ன முறை:

இம்முறையில் நிலவரைபட மற்றும் உண்மையான தூரங்களின் ஒப்பீடு விகிதமாகவோ, பின்னமாகவோ வெளிப்படுத்தப்படும். இது வழக்கமாக R.F என சுருக்கமாகக் கூறப்படுகிறது (R.F. = பிரதிபின்ன முறை).

பிரதிபின்ன முறை = நிலவரைபடத் தூரம் / புவிப்பரப்பின் துரம்

கோட்டளவை முறை:

நில வரைபடங்களில் ஒரு நீண்ட கோடு பல சம பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவும் நிலப்பரப்பில் எவ்வளவு தூரத்தைக் காட்டுகிறது என்பதை அறிவதே கோட்டளவை முறையாகும். இந்த முறையின் மூலம் நிலவரைபடத்திலுள்ள தூரத்தினை நேரடியாக அளக்க உதவுகிறது.

 

2. திசைகள் - தகுந்த படம் வரைந்து விளக்குக.

விடை:


திசைகள்:

பொதுவாக நிலவரைப்படங்கள் வடதிசையை அடிப்படையாகக் கொண்டு வரையப்படுகின்றன.

ஒரு நிலவரைபடத்தில் வடக்குதிதிசை எப்போதும் புவியின் வட துருவத்தை நோக்கியே உள்ளது.

நாம் வட துருவத்தைப் பார்த்து நின்றால், நமது வலக்கை கிழக்கு திசையையும், இடக்கை மேற்குத் திசையையும் நமது பின்புறம் தெற்கு திசையையும் காட்டும்.

இவை அடிப்படை திசைகளாகும். பொதுவாக, நிலவரைபடத்தின் மீது காணப்படும் அம்புமுனை வடக்குத் திசையைக் குறிப்பிடும்.

 

3. உலக அமைவிடத் தொகுதியின் (GPS) பயன்களை விவரி.

விடை:

உலக அமைவிட கண்டறியும் தொகுதியின் நன்மைகள் (GPS):

கைப்பேசிகள், கைக்கடிகாரங்கள், புல்டோசர்கள், கப்பல் கொள்கலன்கள் மற்றும் தானியிங்கி பணப்பரிமாற்ற கருவிகள் (.டி.எம்) என அனைத்திலும் தொழில் நுட்பம் உதவுகிறது.

உலக அமைவிட கண்டறியும் தொகுதியின் முக்கிய நோக்கம் பயண தகவல்களை (தூரம், வழி மற்றம் திசை) மிக துல்லியமாக தருவதே ஆகும். இராணுவ போர்த்தேடல்கள் மற்றம் போர்க்கால மீட்பு நடவடிக்கைகளிலும் உறுதுணையாகத் திகழ்கின்றது. நம்பிக்கையான சுற்றுலா வழிக் காட்டியாகவும் உள்ளது.

விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கைகள், நெருக்கடிகாலத் தேவைகளைத் துரிதமாக வழங்குதல் மற்றும் பேரிடல் நிவாரண நடவடிக்கைகளுக்கும் ஜி.பி.எஸ் பெரிதும் உதவுகிறது.

வானிலை முன்னறிவிப்பு, நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உலக அமைவிட கண்டறியும் தொகுதிகளின் உதவுயுடன் சிறப்பாக செயல்படுகின்றன.

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலவரைபடத் திறன்கள்