Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல் - கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி | 9th Social Science : Geography : Lithosphere – II Exogenetic Processes

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள்

கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சுருக்கமான விடை தருக.

IV. சுருக்கமாக மாக விடையளி


1. வானிலைச்சிதைவு - வரையறு.

விடை:

புவியின் மேற்பரப்பு நேரடியாக வளிமண்டல நிகழ்வுகளோடு தொடர்பு கொள்வதால் பாறைகள் சிதைவடைதலுக்கும், அழிதலுக்கும் உட்படுகின்றன.

இச்செயல்பாடுகளையே வானிலைச் சிதைவு என அழைக்கின்றோம்.

 

2. உயிரினச்சிதைவு என்றால் என்ன?

விடை:

மனித மற்றும் தாவர, விலங்கினச் செயல்பாடுகளினால் பாறைகள் சிதைவுறுதலே உயிரினச் சிதைவு எனப்படும்.

(.கா) (i) தாவரங்களின் வேர்கள் பாறைகளின் வழியே ஊடுருவிச் சென்று பாறைகளை விரிவடையச் செய்கிறது.

 

3. ஆற்றின் மூன்று நிலைகள் யாது? அதனோடு தொடர்புடைய இரண்டு நிலத்தோற்றங்களைக் கூறுக.

விடை:

இளநிலை - V வடிவப்பள்ளத் தாக்குகள், குறுகிய பள்ளத்தாக்குகள்.

முதிர் நிலை - வண்டல் விசிறிகள், குருட்டு ஆறுகள்..

மூப்பு நிலை - டெல்டாக்கள், ஓத பொங்கு முகங்கள்.

 

4. குருட்டு ஆறு என்றால் என்ன?

விடை:

ஆற்று வளைவுகள் காலப்போக்கில் பெரிதாகி இறுதியில் ஒரு முழு வளையமாக மாறுகிறது.

இம்முழு வளைவுகள் முதன்மை ஆற்றிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியைப் போன்று காட்சி அளிக்கும். இதுவே குருட்டு ஆறு எனப்படும்.

 

4. கடற்குகை எவ்வாறு கடல் வளைவிலிருந்து வேறுபடுகிறது?

விடை:

கடல் அலைகள் தொடர்ந்து கடல் ஓங்கல்களின் மீது மோதுவதால் அடிப்பகுதி அரிக்கப்பட்டு துவாரம் போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. இவையே கடல் குகைகள் எனப்படுகின்றன.

அருகருகே உள்ள இரண்டு கடற்குகைகளின் நீட்டு நிலங்கள் அரிக்கப்படுவதால் இணைந்து ஒரு வளைவு போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. இவையே கடல் வளைவுகள் எனப்படும்.

(.கா) நீல் தீவு, (அந்தமான் நிக்கோபார்)

 

6. இந்தியாவில் காணப்படும் ஏதேனும் நான்கு சுண்ணாம்புப்பாறை பிரதேசங்களை பட்டியலிடுக.

விடை:  

குப்ததாம் குகைகள் - மேற்கு பீஹார்

ராபர்ட் குகை - உத்தரகாண்ட்

பாண்டவர் குகைகள் - மத்தியபிரதேசம்

போரா குகைகள் ஆந்திரப்பிரதேசம்

 

7. தொங்கும் பள்ளத்தாக்கு என்றால் என்ன?

விடை:

முதன்மை பனியாற்றினால் உருவாக்கப்பட்ட பள்ளத்தாக்கின் மீது அமைந்திருக்கும் துணைப் பனியாற்றின் பள்ளத்தாக்கு தொங்கும் பள்ளத்தாக்கு ஆகும்.

 

8. வரையறு,

) மொரைன்

) டிரம்லின்

) எஸ்கர்

விடை:

) மொரைன்

பள்ளத்தாக்கு அல்லது கண்டப் பனியாறுகளால் படிய வைக்கப்பட்டு உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் மொரைன்கள் எனப்படும்.

) டிரம்லின்

கவிழ்த்து வைக்கப்பட்ட மிகப்பெரிய கரண்டியைப் போன்றோ அல்லது பாதியாக வெட்டப்பட்ட முட்டையைப் போன்றோ காட்சியளிக்கும் மொரைன்கள் டிரம்ளின்கள் எனப்படுகின்றன.

) எஸ்கர்

பனியாறுகள் உருகுவதால் அவை கொண்டு வரும் கூழாங்கற்கள், சரளைக்கற்கள் மற்றும் மணல் ஒரு நீண்ட குறுகிய தொடர் குன்று போன்று பனியாற்றுக்கு இணையாகப் படிய வைக்கப்படுகிறது. இதுவே எஸ்கர்கள் ஆகும்.

 

9. காற்றின் அரித்தல் செய்கையால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்களைப் பட்டியலிடு.

விடை:

காளான் பாறை

இன்சல் பர்க்

யார்டங்

 

10. கடல் அலை அரிமேடை என்றால் என்ன?

விடை:

ஓங்கல்களின் மீது அலைகள் மோதுவதால் சற்று உயரத்தில் அரித்தல் ஏற்பட்டு தோன்றுவது அலை அரிமேடை ஆகும்.

இது பென்ச், திட்டு, திடல், சமவெளி எனவும் அழைக்கப்படுகிறது.

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள்