Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | சுருக்கமாக விடையளிக்கவும்.

இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் | புவியியல் | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளிக்கவும். | 10th Social Science : Geography : Chapter 5 : India - Resources and Industries

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 4 : இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

சுருக்கமாக விடையளிக்கவும்.

சமூக அறிவியல் : புவியியல் : இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் : சுருக்கமாக விடையளிக்கவும்.

III. சுருக்கமாக விடையளிக்கவும்.

 

1. வளத்தை வரையறுத்து அதன் வகைகளை குறிப்பிடுக.

• இயற்கையிலிருந்து பெறப்பட்டு உயிரினங்களால் பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் இயற்கை வளம் என்று அழைக்கப்படுகிறது. .கா: காற்று, நீர் மண்

• வளங்களின் வகைகள்: புதுப்பிக்கக்கூடிய வளங்கள், புதுப்பிக்க இயலாத வளங்கள்.

 

2. கனிமங்கள் மற்றும் அதன் வகைகள் யாவை?

• ஒரு குறிப்பிட்ட வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளைக் கொண்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற இயற்கை மூலங்கள் கனிமங்கள் ஆகும்.

 

• வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளின் அடிப்படையில் கனிமங்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை: உலோகக் கனிமங்கள், அலோகக் கனிமங்கள்.

 

3. மெக்னீசியத்தின் பயன்களை குறிப்பிடுக.

• இரும்பு எஃகு மற்றும் உலோகக் கலவை உற்பத்திக்கு அடிப்படையான மூலப்பொருள் ஆகும்.

• வெளுக்கும் தூள் பூச்சிக்கொல்லிகள், வண்ணப்பூச்சிகள், மின்கலன்கள் போன்றவைத் தயாரிப்பதற்கு மாங்கனீசு பயன்படுகின்றது.

 

4. இயற்கை எரிவாயு என்றால் என்ன?

இயற்கை எரிவாயு என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அழிந்து புதையுண்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அதிக வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக மக்குவதன் மூலம் உண்டாகக்கூடிய ஒரு வாயு ஆகும்.

 

5. நிலக்கரியின் வகைகளை அதன் கரிம அளவுகளுடன் குறிப்பிடுக.

கரிம அளவின் அடிப்படையில் நிலக்கரி கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.

• ஆந்தரசைட் : 80 முதல் 90%

• பிட்டுமினஸ் : 60 முதல் 80%

• பழுப்பு நிலக்கரி : 40 முதல் 60%

• மரக்கரி : 40% திற்கும் குறைவு

 

6. இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளைக் குறிப்பிடுக.

• மேற்கு வங்காளத்தில் உள்ள ஹூக்ளி ஆற்றங்கரை

• ஆந்திரப் பிரதேசம்

• பீகார்

• அசாம்

• உத்தரப் பிரதேசம்

• சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா.

 

7. இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி பகுதிகளைக் குறிப்பிடுக.

மேற்கு கடற்கரைக்கு அருகில் உள்ள எண்ணெய் வயல்கள்:

• மும்பை ஹை எண்ணெய் வயல்

• குஜராத் கடற்கரை

• அங்கலேஸ்வர்

• காம்பே - லூனி பகுதிகள்

கிழக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள எண்ணெய் வயல்கள்:

• பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு

• திக்பாய் எண்ணெய் வயல்

• ருத்ரசாகர் - லாவா எண்ணெய் வயல்கள்

• அந்தமான் நிகோபாரின் உட்பகுதிகள்

 

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 4 : இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள்