Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

நீர்க்கோளம் | புவியியல் | சமூக அறிவியல் - கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி | 9th Social Science : Geography: Hydrosphere

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நீர்க்கோளம்

கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நீர்க்கோளம் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சுருக்கமான விடை தருக.

IV. சுருக்கமான விடையளி.


1. 'நீர்க்கோளம்பொருள் கூறுக.

விடை:

புவியின் நீர்சூழ் பகுதி நீர்க்கோளம். இது புவியில் காணப்படும் அனைத்து நிலையிலும் உள்ள (திண்ட, நீர்ம, வாய்) நீரை உள்ளடக்கியது.

2. நீரியல் சுழற்சி என்றால் என்ன?

விடை:

புவியின் நீரானது நிலைத்த தன்மையற்ற, நகரும் தன்மையுடையது. புவியில் உள்ள நீர் தனது நிலைகளை (பனிக்கட்டி, நீர், நீராவி) தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருப்பது நீரியல் சுழற்சி ஆகும்.

3. கடலடி நிலத்தோற்றங்கள் யாவை?

விடை:

கண்டத்திட்டு

கண்டச்சரிவு

கண்ட உயர்ச்சி

கடலடி சமவெளிகள் () அபிசல் சமவெளி

கடல் பள்ளம் () அகழிகள்

கடலடி மலைத் தொடர்கள்.

 

4. கடல் நீரோட்டங்களைத் தோற்றுவிக்கும் காரணிகள் யாவை?

விடை:

புவியின் சுழற்சி

வீசும் காற்று

கடல் நீரின் வெப்பம்

உவர்ப்பியத்தில் உள்ள வேறுபாடு.

 

5. கடல் அலைகளைப் பற்றிச் சுருக்கமாக விடையளி.

விடை:

கடல் நீர் இயக்கங்களில் மிகவும் வலிமை வாய்ந்தவை அலைகளே. காற்று கடலின் மேற்பரப்பில் வீசும்போது சிற்றலைகள் உருவாகின்றன. காற்றின் வேகம், நீடிக்கம் காலம், திசை ஆகியவற்றைப் பொறுத்து அலைகளின் உயரம் அமையும்.

ஆழ்கடலில் ஏற்படும் நில அதிர்வுகளினால் ஏற்படும் அலைகள் அதிக சேதத்தை ஏற்படுத்தும் ஆழிப் பேரலைகள்.

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நீர்க்கோளம்