Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி

வணிக விலங்கியலின்போக்குகள் | விலங்கியல் - பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி | 11th Zoology : Chapter 13 : Trends in Economic Zoology

11 வது விலங்கியல் : பாடம் 13 : வணிக விலங்கியலின்போக்குகள்

பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி

11 வது விலங்கியல் : பாடம் 13 : வணிக விலங்கியலின்போக்குகள் : பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி, புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

14. கூட்டு மீன் வளர்ப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது - விவரி.

கூட்டு மீன் வளர்ப்பின் முக்கியத்துவம்.

1. கூட்டு மீன் வளர்ப்பில் உணவிற்காக மீன்களிடம் சண்டை ஏற்படுவதில்லை.

2. ஆக்ஸிசன் குறைபாடு ஏற்படுவதில்லை

3. மீன் வளர்ப்பிடத்தில் மேலே வாழும் மீன்கள், நீர் நிலையில் மிதக்கும் தாவர மற்றும் விலங்கு மிதவை உயிர்களையும். நடு பகுதியில் வாழும் மீன்கள், நீர் நிலையில் மூழ்கி வாழும் தாவரங்களையும், நீர் நிலையில் தரைப் பகுதியில் வாழும் மீன்கள், இரந்து தரையில் தங்கும், தாவரம், மற்றும் விலங்கு உயிர்களை உணவாக உட்கொள்ளும்.

4. கூட்டு மீன் வளர்ப்பில் வளர்க்கப்படும் மீன்கள் கொடுக்கப்படும் உணவை ஏற்று அதிக மாமிசமாக மாற்றும் திறன் கொண்டது.

5. குறைந்த காலத்தில் அதிக அளவு வளர்ச்சியடையும்.

6. கூட்டு மீன் வளர்ப்பில் வளர்க்கப்படும் மீன்கள் கட்லா கட்லா, லேபியோ ரோஹிட்டா, சிர்ரைனா மிர்காலா.


15. மண்புழு உரத்தின் பயன்களை எழுதுக.

1. மண்புழு உரமானது தாவரங்களுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களைக் கொண்டுள்ளது.

2. மண்ணின் இயல்புத்தன்மை, காற்றோட்டம், நீரைத் தேக்கி வைக்கும் பண்பு ஆகியவற்றை மேம்படுத்தி மண் அரிப்பைத் தடுக்கிறது.

3. அதிக ஊட்டச்சத்து நிறைந்த மண்ணாக நிலத்தை மாற்றுகிறது

4. மாடி தோட்டத்திற்கு உரமாக பயன்படுகிறது

5. விதை முளைத்தலைத் தூண்டி தாவர வளர்ச்சியை அளிக்கிறது.


16. தேனீக்களின் மூவகைச் சமூகக் கட்டமைப்பின் பெயர்களைக் கூறு.

1) இராணி தேனீ

2) ஆண் தேனீக்கள்

3) வேலைக்காரத்தேனீ


17. கீழ் வருவனவற்றைப் பெயரிடுக.

i) தேன்கூட்டின் மிகப்பெரியத் தேனீ

விடை: இராணித் தேனீ

ii) சில ஆண் தேனீக்களுடன் புதிய கன்னி இராணித் தேனி கூட்டைவிட்டுப் பறந்து செல்லுதல்

. விடை: கலவிப் பறப்பு


18. வேலைக்காரத் தேனீக்களின் பணியைக் கூறு.

1. இராயல் ஜெல்லி சுரத்தல்

2. இளம் உயிரிகளுக்கு உணவூட்டுதல்

3. இராணித் தேனீயை உணவுண்ண செய்தல் 

4. இராணித் தேனீயையும் ஆண் தேனீயையும் பாதுகாத்தல்.

5. தேன் மெழுகைச் சுரந்து தேன்கூட்டினை உருவாக்குதல்

6. தேன் கூட்டினை சுத்தப்படுத்துதல்.

7. கூட்டினை குளிரூட்டுதல்

8. தேன் கூட்டினை பாதுகாத்தல்

9. தேன் மகரந்தம் புரோபோலிஸ் நீர் சேகரித்தல் 


19. கலவிப் பறப்புக்குப்பின் ஆண் தேனீக்களில் நடைபெறுவதென்ன?

இராணி தேனீ சுரக்கும் பெரபோனால் கவரப்பட்ட ஆண் தேனீயானது இராணித் தேனீயுடன் இச்சேர்க்கையில் ஈடுபடும். இதற்குப் பின் ஆண் தேனீ இறந்து விடும்.


20. பட்டுப்பூச்சியின்பொருளாதார முக்கியத்துவத்தைக் கூறு.

1. பட்டு நூல்கள் பட்டுத் துணிகள் தயாரிக்க பயன்படுகின்றன.

2. பட்டுநூலுடன் இயற்கை மற்றும் செயற்கை நூலினை பயன்படுத்தி டெரிபட்டு, காட்டன்பட்டு தயாரிக்கப்படுகிறது.

3. தொழிற்சாலைகளிலும் இராணுவத் துறையிலும் பட்டு பயன்படுத்தப்படுகிறது.

4. மீன்பிடி வலைகள், பாராசூட்டுகள், கார்ட்ரிட்க் பைகள் தொலை தொடர்பு கம்பிகளின் மேலுறைகள் மற்றும் கம்பியில்லா தொலைபேசிக் கருவிகள் தயாரிக்கப்படுகின்றது.

5. பந்தய காரின்டயர்கள் வடிகட்டி இழைகள் மருத்துவத்துறையில் காயக்கட்டுத் துணிகள் மற்றும் தையலிடுவதற்குப் பட்டு பயன்படுகிறது


21. மீன்களின் உணவூட்ட மதிப்புகள் எவை?

1. மீன்கள் புரத உணவிற்கான முக்கிய ஆதாரமாகும்.

2. மனிதனின் உணவூட்டத் தேவைக்கேற்ப முக்கிய உணவாகும்.

3. சார்டைன் மாக்கெரல் ருனா போன்ற மீன் இனங்களில் அதிக அமினோ அமிலங்கள் காணப்படுவதால் சிறந்த புரத உணவாகும்.

4. அதிக அளவு ஹிஸ்டிடின் என்னும் மீனுக்கு மணமளிக்கும் அமிலத்தைக் கொண்டுள்ளன.

5. மீன்களில் ஒபேசா 3 கொழுப்பு அமிலங்கள் நிலந்துள்ளது.

6. மீன்களில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு,பாஸ்பரஸ், அயோடின் மற்றும் தாமிரம்போன்ற தனிமங்கள் நிறைந்துள்ளது.


22. இறால்வளர்ப்பின் பொருளாதார முக்கியத்துவத்தைக் கூறு.

1. இறால் வளர்ப்பு உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு உணவாக பயன்படுகின்றது

2. இறால் மாமிசம் சுவைமிக்கது இதில் கிளைக்கோஜன் புரதம் அதிகமாகவும் கொழுப்பு குறைவாகவும் உள்ளது.

3. பொருளாதார ரீதியாக அதிக வருமானத்தை அளிப்பது.


23. அரக்குப்பூச்சியின்பொருளாதார முக்கியத்துவத்தைக் கூறு.

1. முத்திரை மெழுகு தயாரிக்கவும், ஒளியியல் கருவிகளில் ஒட்டும் பொருளாகவும் பயன்படுகின்றது.

2. மின்சாரத்துறையில் மின் கடத்தாப் பொருளாக பயன்படுகின்றன.

3. காலணி தயாரிப்பில் தோல் பொருட்களை பளபளப்பாக்கவும் மரப்பூச்சு தயாரிக்கவும் பயன்படுகிறது.

4. புகைப்படங்கள் செதுக்கித் தயாரிக்கும் பொருட்கள் நெகிளி வார்ப்பு பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகின்றது.

5. தங்க நகைகளின் உள்ளீட்டு பொருளாகவும் பயன்படுகின்றது.


24. அரக்குப்பூச்சிகள் வளரும் ஏதேனும் இரண்டு மரங்களின் பெயர்களைக் கூறு.

கருங்காலி (Acacia catechu)

கருவேலை (Acacia nilotica) 


25. குறுக்குக் கலப்பு - வரையறு.

உயர்தர பண்புகளை உடைய ஒரு இனத்தின் ஆண்விலங்கு மற்றும் உயர்தர பண்புகளை உடைய மற்றொரு இனத்தின் பெண் விலங்கு இடையே செய்யப்படும் கலப்பு குறுக்குக் கலப்பு ஆகும்.

கலப்புயிரி உயர்தர பண்புகளை கொண்டு அமையும்.


26. செயற்கை முறை விந்தூட்டத்தின் பயன்கள்யாவை?

1. இது கருவுறுதல் வீதத்தை உயர்த்துகின்றது

2. இனப்பெருக்க நோய்கள் தவிர்க்கப்படுகின்றன

3. காயம்பட்ட விலங்குகளிடமிருந்தும் விந்து நீர்மம் சேகரிக்கலாம்.

4. உயர் பண்புகள் கொண்ட விலங்குகள் தொலைவில் இருந்தாலும் அவற்றின் விந்து நீர்மத்தைக் கொண்டு கருவுறுச் செய்யலாம்.


27. கால்நடை இனப்பெருக்கத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு தொழில் நுட்பங்களைப் பற்றி விவாதி.

இனப்பெருக்க வகைகள்: விலங்குகளின் இனப்பெருக்கம் உள் இனக்கலப்பு மற்றும் வெளியினக் கலப்பு என இரு வகைப்படும்.

I. உள் இனக்கலப்பு:

1. 4 முதல் 6 தலைமுறைகளுக்கு ஒரே இனத்தின் விலங்குகளுக்கிடையே இனக்கலப்பு செய்வது

2. உள் இனக்கலப்பினால் ஒத்த கருநிலைத்தன்மை உயர்கின்றது. இதனால், ஒடுங்கு ஜீன்களின் கொடிய விளைவுகள் வெளிப்படுகிறது.

3. இது இனப்பெருக்கத்திறனையும் உற்பத்தித் திறனையும் மீட்க உதவுகின்றது.

II. வெளியினக் கலப்பு:

1. ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த சந்ததி தொடர்பில்லாத விலங்குகளுக்கிடையே இனக்கலப்பு செய்வது.

2. இதில் உருவாகும் விலங்குக்கு 4 முதல் 6 தலைமுறை வரை பொது மூதாதையர் கிடையாது

3.இவ்விதக் கலப்பால் புதிய, விரும்பத்தக்க பண்புகளும் உயர் பண்புகளைக் கொண்ட புதிய கலப்பின உயிர்களும் உண்டாகிறது.

a. வெளிக் கலப்பு:

பொது மூதாதையர்களற்ற, தொடர்பில்லாத ஒரே இனத்தின் வெவ்வேறு விலங்குகளுக்கிடையே கலப்பு செய்வது வெளிக்கலப்பு ஆகும்.

b. குறுக்குக் கலப்பு:

இது உயர்தர பண்புகளை உடைய ஒரு இனத்தின் ஆண் விலங்கு மற்றும் உயர்தர பண்புகளை உடைய மற்றொரு இனத்தின் பெண் விலங்குக்கு இடையே செய்யப்படும் கலப்பு.

C. சிற்றினங்களுக்கிடையே கலப்பினம் செய்தல்:

இரு வேறு சிற்றினங்களைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் விலங்குகளுக்கு இடையே கலப்பு செய்யப்படுகின்றது.

III. பல அண்ட வெளியேற்ற கரு மாற்று தொழில் நுட்பம்

1. விரும்பத்தக்க பண்புகளை கொண்ட விலங்குகளை பெருக்க இம்முறை பயன்படுகிறது

2. செயற்கை இனப்பெருக்கம் குறையும்போது இம்முறை பயன்படுகிறது.

3. இம்முறையில் பாலிக்கிள் செல்களை தூண்டும் ஹார்மோனை பசுக்களுக்கு செலுத்தி அண்ட செல் உற்பத்தி மற்றும் அண்டசெல் வெளியேற்றம் தூண்டப்படுகிறது.

4.இவ்வாறு பெறப்பட்ட அண்டங்களை செயற்கை கருவூட்டம் செய்யப்படுகிறது.

5.8-32 செல் நிலையில் இருக்கும் கருவானது வாடகைத் தாயின் கருப்பைக்குள் பதியப்பட்டு மீண்டும் அடுத்த அண்ட வெளியேற்றத்திற்கு மரபுத்தாய் பயன்படுகிகன்றது

6. இவ்வகையான தொழில்நுட்பம் பசு, ஆடு, எருமை இனங்களில் பயன்படுத்தப்படுகிறது.

7. அதிக பால் தரும் பெண்பசுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.

8. அதிக இறைச்சி தரும் ஆண் காளைகளை குறைந்த காலத்தில் உருவாக்க உதவுகிறது.


28. MOET தொழில்நுட்பத்தின் பயன்களை விவரி.

I. பயன்கள்

1. அதிக பால் தரும் பெண்பசுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.

2. அதிக இரைச்சி தரும் ஆண் காளைகளை குறைந்த காலத்தில் உருவாக்க உதவுகிறது.

II. தொழில் நுட்பத்தின் முறைகள்:

1. விரும்பத்தக்க பண்புகளை கொண்ட விலங்குகளை பெருக்க இம்முறை பயன்படுகிறது

2. செயற்கை இனப்பெருக்கம் குறையும்போது இம்முறை பயன்படுகிறது.

3. இம்முறையில் பாலிக்கிள் செல்களை தூண்டும் ஹார்மோனை பசுக்களுக்கு செலுத்தி அண்ட செல் உற்பத்தி மற்றும் அண்டசெல் வெளியேற்றம் தூண்டப்படுகிறது.

4. இவ்வாறு பெறப்பட்ட அண்டங்களை செயற்கை கருவூட்டம் செய்யப்படுகிறது.

5. 8-32 செல் நிலையில் இருக்கும் கருவானது வாடகைத் தாயின் கருப்பைக்குள் பதியப்பட்டு மீண்டும் அடுத்த அண்ட வெளியேற்றத்திற்கு மரபுத்தாய் பயன்படுகின்றது.

6. இவ்வகையான தொழில்நுட்பம் பசு, ஆடு, எருமை இனங்களில் பயன்படுத்தப்படுகிறது.


29. வாத்தின் தனிப் பண்புகளை விவரி

1. உடல் முழுமையும் நீர் ஒட்டா தன்மையுள்ள இறகுகளால் மூட்டப்பட்டுள்ளது.

2. தோலின் கீழ் உள்ள ஓரடுக்கு கொழுப்பு படலம் இறகுகளை ஈரத்தன்மை அடையாமல் பாதுகாக்கிறது.

3.காலையிலோ அல்லது இரவிலோ முட்டையிடுபவை.

4. இவைகள் அரிசித்தவிடு, சமையலறை கழிவுகள் மீன் மற்றும் நத்தைகளை உட்கொள்ளக் கூடியவை.


30. பட்டுப்புழுவின் வாழ்க்கைச் சுழற்சியை விவரி.

11 வது விலங்கியல் : பாடம் 13 : வணிக விலங்கியலின்போக்குகள்