Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | சுருக்கமாக விடையளிக்கவும்

இரண்டாம் உலகப்போர் | வரலாறு | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளிக்கவும் | 10th Social Science : History : Chapter 3 : World War II

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 3 : இரண்டாம் உலகப்போர்

சுருக்கமாக விடையளிக்கவும்

சமூக அறிவியல் : வரலாறு : இரண்டாம் உலகப்போர் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: சுருக்கமாக பதிலளிக்கவும்

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

 

1. முதல் உலகப்போருக்குப் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?

• முசோலினி (இத்தாலி)

• ஹிட்லர் (ஜெர்மனி)

• பிராங்கோ (ஸ்பெயின்)

 

2. ஹிட்லர் ஜெர்மனி மக்களின் ஆதரவை எவ்வாறு பெற்றார்?

• ஜெர்மனி பெருமளவு அவமானப்படுத்தப்பட்டதாக நிலவிய கருத்தைப் பயன்படுத்தி,

• தனது வல்லமை மிக்க சொற்பொழிவாற்றும் திறமையாலும் உணர்ச்சிமிக்கப் பேச்சுக்களாலும்,

• ஜெர்மனியை அதன் ராணுவப் புகழ்மிக்க முந்தைய காலத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்வதாகவும் கூறி அடால்ப் ஹிட்லர் மக்களைத் தன்பக்கம் ஈர்த்தார்.

 

3. முத்துத் துறைமுக நிகழ்வை வரி.

1941 டிசம்பரில் ஹவாயிலுள்ள அமெரிக்கக் கப்பற்படைத்தளமான முத்துத் துறைமுகத்தின் மீது ஜப்பானிய விமானப்படைகள் முன்னறிவிப்பின்றி பெரும் தாக்குதலைத் தொடுத்தன.

• இத்தாக்குதலில் பல போர்க்கப்பல்களும் போர் விமானங்களும் அழிக்கப்பட்டன.

• அமெரிக்க வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

• இதனைத் தொடர்ந்து அமெரிக்கா ஜப்பான் மீது போர்ப் பிரகடனம் செய்தது.

• சீனாவும் பிரிட்டனும் அமெரிக்காவுடன் இணைந்தன.

 

4. பெவரிட்ஜ் அறிக்கை குறித்து நீ அறிந்தது என்ன?

• பெவரிட்ஜ் அறிக்கையை 1942 ஆம் ஆண்டில் இங்கிலாந்து வெளியிட்டது.

• அவ்வறிக்கையில், பொது நலனுக்குப் பெருந்தடைகளாக உள்ள வறுமை நோய் ஆகியவற்றை வெற்றிகொள்ள, பொதுமக்களுக்கு அதிக வருமானத்தை அளிப்பது, உடல் நலப்பாதுகாப்பு, கல்வி, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்கும் பல திட்டங்கள் தொகுப்பாக இடம் பெற்றிருந்தன.

 

5. பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

• உலக வங்கி

• பன்னாட்டு நிதி அமைப்பு

 

6. பன்னாட்டு நிதியமைப்பின் (IMF) நோக்கங்கள் யாவை?

• உலக அளவில் நிதி சார்ந்த ஒத்துழைப்பைப் பேணுவது.

• நிதி நிலையை உறுதியானதாக வைத்திருத்தல்.

• பன்னாட்டு வணிகத்திற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது.

• வேலைவாய்ப்பினைப் பெருக்குவது.

• நீடித்தப் பொருளாதார வளர்ச்சி.

• உலகம் முழுவதும் வறுமையை ஒழிப்பது என்பனவாகும்.

 

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 3 : இரண்டாம் உலகப்போர்