Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | செயற்கைக் காந்தங்கள்

காந்தவியல் | அலகு 7 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - செயற்கைக் காந்தங்கள் | 8th Science : Chapter 7 : Magnetism

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 7 : காந்தவியல்

செயற்கைக் காந்தங்கள்

காந்தத்தன்மை கொண்ட பொருள்களைக் கொண்டு செயற்கைக் காந்தங்கள் உருவாக்கப் படுகின்றன. பொதுவாக இரும்பு எஃகு உலோகக் கலவைகளை முறையில் காந்தமாக்குவதன் மூலம் இவை தயாரிக்கப்படுகின்றன.

செயற்கைக் காந்தங்கள்

காந்தத்தன்மை கொண்ட பொருள்களைக் கொண்டு செயற்கைக் காந்தங்கள் உருவாக்கப் படுகின்றன. பொதுவாக இரும்பு எஃகு உலோகக் கலவைகளை முறையில் காந்தமாக்குவதன் மூலம் இவை தயாரிக்கப்படுகின்றன. மேலும், மேக்னடைட் அல்லது செயற்கைக் காந்தங்களை காந்தப் பொருள்களின் மீது நகர்த்துவதன் மீது நகர்த்துவதன் மூலமும் இவ்வகைக் காந்தங்கள் உருவாக்கப்படுகின்றன. காந்தப் பண்புகளை தக்க வைத்துக்கொள்ளும் விதத்தின் அடிப்படையில் செயற்கைக் காந்தங்களை நிலையான அல்லது தற்காலிகக் காந்தங்கள் என வகைப்படுத்தலாம்.


1. தற்காலிகக் காந்தங்கள்

தற்காலிகக் காந்தங்கள், புறக்காந்தப் புலத்தின் உதவியுடன் தயாரிக்கப்படுகின்றன. புறக் காந்தப்புலம் நீக்கப்படும்போது வெகுவிரைவில் காந்தப் பண்புகளை இழக்கின்றன. தற்காலிகக் காந்தங்கள் தேனிரும்பிலிருந்து உருவாக்கப்படுகின்றன. மின்னோட்டம் பாயும் கம்பிச் சுருளால் உருவாக்கப்படும் புறக் காந்தப்புலத்தில் வைக்கப்படும் தேனிரும்பானது காந்தமாக செயல்படுகிறது. மின்சுற்றில் மின்னோட்டம் நிறுத்தப்பட்ட உடனே இது காந்தப் பண்புகளை இழந்து விடும். மின்சார மணி மற்றும் சுமைதூக்கி ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் காந்தங்கள் தற்காலிகக் காந்தங்களுக்கு உதாரணமாகும்.


செயல்பாடு 6

ஒரு மரப்பலகையின் மீது குண்டுசிகளைப் பரப்பி வைத்து அவற்றினருகே ஓர் இரும்பு ஆணியினைக் கொண்டு செல்லவும். அவை கவரப்படுகின்றனவா? இப்போது சட்டக் காந்தத்தின் ஒரு முனையினால் ஆணியின் ஒரு முனையினைத் தொடவும். மெதுவாக ஆணியின் மீது காந்தத்தினை ஒரே திசையில் மறுமுனை வரை நகர்த்தவும். படத்தில் காட்டியவாறு இதே போன்று மீண்டும் 20 அல்லது 30 முறை நகர்த்தவும். ஆணியின் மீது முன்னும் பின்னும் நகர்த்தாமல் ஒரே திசையிலேயே நகர்த்த வேண்டும். தற்போது குண்டுசிகளுக்கருகில் இரும்பு ஆணியினைக் கொண்டு செல்லவும். என்ன காண்கிறாய்? இரும்பு ஆணி தற்காலிகக் காந்தமாக மாறுவதால், குண்டுசிகள் ஆணியின் மீது ஒட்டிக் கொள்வதை நாம் காணலாம்.


புறக் காந்தப்புலத்தில் ஒரு  பொருளினை வைத்து, அதனை நிலையான அல்லது தற்காலிகக் காந்தமாக உருவாக்கும் முறையே காந்தமாக்கல் எனப்படும். இது செயற்கைக் காந்தங்களை உருவாக்கும் முறைகளுள் ஒன்றாகும்.

 

2. நிலையான காந்தங்கள்

புறக் காந்தப்புலம் இல்லாத போதும் தொடர்ந்து காந்தப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளும் செயற்கைக் காந்தங்களை நிலையான காந்தங்கள்' எனலாம். கனமான எஃகு மற்றும் சில உலோகக் கலவைகளைக் கொண்டு இவ்வகைக் காந்தங்கள் உருவாக்கப்படுகின்றன. பொதுவாகப் பயன்படும் நிலைக் காந்தங்கள் அல்நிக்கோ (ALNICO - அலுமினியம், நிக்கல் மற்றும் கோபால்ட் ஆகியவற்றின் உலோகக்கலவை) தயாரிக்கப்படுகின்றன. உலோகக்கலவையால் குளிர்ப்பதனி, ஒலிப்பெருக்கி மற்றும் காந்த ஊசி ஆகியவற்றில் பயன்படும் காந்தங்கள் நிலையான காந்தங்களுக்கு சில எடுத்துக்காட்டுகளாகும். நியோடிமியம் (Neodymium) காந்தங்களே, பூமியில் காணப்படும் வலிமையான திறன்மிகுந்த காந்தங்களாகும்.

கால்நடைகள் புல் மேயும்போது கூர்மையான இரும்புக்கம்பி மற்றும் பிற இரும்புப் பொருள்களையும் உண்பதால் செரிமானப் பகுதி காயமடைகிறது. அல்நிக்கோ எனப்படும் பசுக்காந்தங்கள் இத்தகைய பொருள்களைக் கவர்ந்திழுத்து கால்நடைகளைப் பாதுகாக்கின்றன.

ஒரு காந்தத்தின் காந்தப் பண்புகளை கீழ்க்காணும் வழிகளில் நீக்கலாம்.

• ஒரு காந்தத்தினை நீண்ட காலம் பயன்படுத்தாமல் வைத்திருத்தல்.

• காந்தப் பொருள்களைத் தொடர்ந்து அடித்தல் உயரமான இடத்திலிருந்து காந்தத்தினைக் கீழே விழச் செய்தல்.

• ஒரு காந்தத்தை அதிக வெப்பநிலைக்கு உட்படுத்துதல்,

• காந்தத்தைச் சுற்றியுள்ள கம்பிச்சுருளில் வேறுபட்ட மின்னோட்டத்தினை பாயச்செய்தல். காந்தத்தை முறையாகப் பராமரிக்காமல் இருத்தல்.

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 7 : காந்தவியல்