Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | தன்வினைவேக மாற்றம், தளர்வு வினைவேக மாற்றம்

புறப்பரப்பு வேதியியல் - தன்வினைவேக மாற்றம், தளர்வு வினைவேக மாற்றம் | 12th Chemistry : UNIT 10 : Surface Chemistry

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 10 : புறப்பரப்பு வேதியியல்

தன்வினைவேக மாற்றம், தளர்வு வினைவேக மாற்றம்

சில குறிப்பிட்ட வினைகளில், வினையில் உருவாகும் விளைபொருட்களுள் ஒன்று அதே வினைக்கு வினைவேக மாற்றியாக செயல்படுகிறது. துவக்கத்தில் வினை மிக மெதுவாக நிகழ்கிறது. ஆனால், நேரம் செல்ல செல்ல வினையின் வேகம் அதிகரிக்கிறது.

தன்வினைவேக மாற்றம்:

சில குறிப்பிட்ட வினைகளில், வினையில் உருவாகும் விளைபொருட்களுள் ஒன்று அதே வினைக்கு வினைவேக மாற்றியாக செயல்படுகிறது. துவக்கத்தில் வினை மிக மெதுவாக நிகழ்கிறது. ஆனால், நேரம் செல்ல செல்ல வினையின் வேகம் அதிகரிக்கிறது. பின்வரும் வினைகளில் தன் வினைவேக மாற்றம் கண்டறியப்பட்டுள்ளது.

CH3 COOC2H5 +H2O → CH3COOH +C2H5OH 

அசிட்டிக் அமிலம் தன் வினைவேக மாற்றியாக செயல்படுகிறது.

2AsH3 →  2As+3H2

ஆர்சனிக் தன்வினைவேக மாற்றியாக செயல்படுகிறது.


தளர்வு வினைவேக மாற்றம்

சில குறிப்பிட்ட வினைகளில், சில சேர்மங்களை சேர்க்கும்போது வினையின் வேகம் குறைகிறது. பின்வரும்வினைக்கு எத்தனால் தளர்வு வினைவேக மாற்றியாக செயல்படுகிறது

(i) 4CHCI3+3O2 → 4COCl2+2H2O+2Cl2

எத்தனால் வினையின் வேகத்தை குறைக்கிறது

(ii) 2H2O2 → 2H2O+O2

ஹைட்ரஜன் பெராக்சைடு சிதைவடையும் வினையில், நீர்த்த அமிலம் அல்லது கிளிசரால் தளர்வு வினைவேக மாற்றிகளாக செயல்படுகின்றன.


12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 10 : புறப்பரப்பு வேதியியல்