Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | மனித உரிமையின் அடிப்படைப் பண்புகள்

மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் | அலகு 4 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மனித உரிமையின் அடிப்படைப் பண்புகள் | 8th Social Science : Civics : Chapter 4 : Human Rights and UNO

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 4 : மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

மனித உரிமையின் அடிப்படைப் பண்புகள்

மனித உரிமையின் அடிப்படைப் பண்புகள்

மனித உரிமையின் அடிப்படைப் பண்புகள்

இயல்பானவை: அவை எந்தவொரு நபராலும் அதிகாரத்தாலும் வழங்கப்படுவதில்லை .

அடிப்படையானவை: இந்த அடிப்படை உரிமைகள் இல்லையென்றால் மனிதனின் வாழ்க்கையும், கண்ணியமும் அர்த்தமற்றதாகிவிடும்.

மாற்ற முடியாதவை: இவைகள் தனிநபரிடம் இருந்து பறிக்க முடியாதவைகள் ஆகும்.

பிரிக்க முடியாதவை: மற்ற உரிமைகளை ஏற்கனவே அனுபவித்துக் கொண்டிருந்தாலும் கூட இந்த அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது.

உலகளாவியவை: இந்த உலகளாவிய உரிமைகள் ஒருவரின் தோற்றம் அல்லது நிலையைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இந்த உரிமைகள் பொருந்தும். இந்த உரிமைகள் தேசிய எல்லையைத் தாண்டி அனைத்து நாடுகளிலும் அமல்படுத்தப்படுகின்றன.

சார்புடையவை: இவைகள் ஒன்றுக்கொன்று சார்புடையவைகள் ஆகும். ஏனென்றால் ஒரு உரிமையைப் பயன்படுத்தும் போது மற்றொன்றை உணராமல் இருக்க முடியாது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் நாள் உலக மனித உரிமைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மனித உரிமைகளை உலக அளவில் அறிவித்த பெருமை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையையே சாரும்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 4 : மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்