Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | பட்டியல், இலாபம் மற்றும் நட்டம்

பருவம் 2 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் | 6th Maths : Term 2 Unit 3 : Bill, Profit and Loss

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : பட்டியல், இலாபம் மற்றும் நட்டம்

பட்டியல், இலாபம் மற்றும் நட்டம்

கற்றல் நோக்கங்கள்: ● பட்டியல் தயாரித்தல் மற்றும் பட்டியல் தொகையைச் சரிபார்த்தல். ● இலாபம் மற்றும் நட்டத்தை கணக்கிடல். ● அடக்க விலை, விற்ற விலை, குறித்த விலை மற்றும் தள்ளுபடி ஆகியவற்றைக் கணக்கிடல்.

இயல் 3

பட்டியல், இலாபம் மற்றும் நட்டம்



கற்றல் நோக்கங்கள்:

பட்டியல் தயாரித்தல் மற்றும் பட்டியல் தொகையைச் சரிபார்த்தல்.

இலாபம் மற்றும் நட்டத்தை கணக்கிடல்.

அடக்க விலை, விற்ற விலை, குறித்த விலை மற்றும் தள்ளுபடி ஆகியவற்றைக் கணக்கிடல்.


அறிமுகம்

எந்த ஒரு தனி மனிதனும் தன் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் எந்தவொரு பொருளையும் தானே தயாரிப்பதில்லை. அப்பொருள்களை நிறுவனங்கள், கடைகள் அல்லது தனிநபர்களிடமிருந்து வாங்குகின்றனர். இவ்வகைச் செயல்களின் மூலமே வர்த்தகம் நடைபெறுகிறது. எனவே, வர்த்தகம் என்பது சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றத் தனிநபர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் பொருள்களைத் தயாரித்து விற்பதாகும். ஒவ்வொரு வர்த்தகமும் பட்டியல், இலாபம், நட்டம் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.

இந்த இயலில் நமது அன்றாட வாழ்வில் எதிர் கொள்ளும் பட்டியல் (Bill) பற்றியும் வணிகப் பரிவர்த்தனையில் ஏற்படும் இலாபம் மற்றும் நட்டத்தைப் பற்றியும் கற்போம்.


எங்கும் கணிதம்அன்றாட வாழ்வில் பட்டியல், இலாபம் மற்றும் நட்டம்


பட்டியலின் மாதிரி 


விற்பனை நிலையத்தின் மாதிரி

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : பட்டியல், இலாபம் மற்றும் நட்டம்