Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | உயிரி சுட்டிக்காட்டிகள்

பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை | அலகு 21 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - உயிரி சுட்டிக்காட்டிகள் | 8th Science : Chapter 21 : Crop Production and Management

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 21 : பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை

உயிரி சுட்டிக்காட்டிகள்

சுற்றுச் சூழலின் நிலையை வெளிப்படுத்தக் கூடிய ஓர் உயிரினம் அல்லது இனங்களின் தொகுப்பு உயிரி - சுட்டிகள் அல்லது உயிரியல் சுட்டிக்காட்டிகள் எனப்படுகின்றன.

உயிரி சுட்டிக்காட்டிகள்

சுற்றுச் சூழலின் நிலையை வெளிப்படுத்தக் கூடிய ஓர் உயிரினம் அல்லது இனங்களின் தொகுப்பு உயிரி - சுட்டிகள் அல்லது உயிரியல் சுட்டிக்காட்டிகள் எனப்படுகின்றன. புவியில் ஏற்படும் மாற்றங்களை, குறிப்பாக பெருகிவரும் மக்கள் தொகை செயல்பாடுகளால் ஏற்படும் சூழ்நிலை மாற்றங்களைப் புரிந்து கொள்ளவும், பட்டியலிடவும் உயிரி - சுட்டிகள் பயன்படுகின்றன. மண்வளத்தைக் குறிக்கும் உயிரி - சுட்டிக்காட்டிகள் மண் அமைப்பு, மேம்பாடு, ஊட்டப்பொருள் சேமிப்பு மற்றும் உயிரினங்களின் செயல்பாடுகளைப் பற்றிய தகவல்கள் ஆகியவற்றை நமக்கு அளிக்கின்றன.

உயிரியல் சுட்டிகள் சூழ்நிலை மண்டலத்தின் நிலைப்பாட்டினையும், அவற்றில் ஏற்படும் மாறுபாடுகளையும் விளக்குகின்றன. லைக்கன்கள் கால நிலை மாற்றத்தினையும், காற்றுமாசுபடுதலின் விளைவுகளையும் விளக்கும் ஒரு உயிரி சுட்டியாகும். லைக்கன் என்பது பாசி மற்றும் பூஞ்சை உயிரிகள் ஒருங்கிணைந்த ஒர் அமைப்பாகும். லைக்கன்கள் வெப்பநிலை, ஈரப்பதம், காற்று மற்றும் காற்று மாசுபடுத்திகள் போன்றவற்றைக் குறிக்கககூடிய சுற்றுச்சுழல் அளவி ஆகும். இவை காலநிலை, காற்றின் தரம் மற்றும் உயிரியல் செயல்முறைகள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தகவல்களை அளிக்கின்றன.


 

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 21 : பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை