பாய்வுக் கட்டுப்பாடு | C++ - C++ switch கூற்று | 11th Computer Science : Chapter 10 : Flow of Control

11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு

C++ switch கூற்று

switch கூற்று என்பது ஒரு பல வழி கிளைப்பிரிப்பு கூற்றாகும்.

switch கூற்று


switch கூற்று என்பது ஒரு பல வழி கிளைப்பிரிப்பு கூற்றாகும். இது கோவையின் மதிப்பின் அடிப்படையில் பல்வேறு நிரல் பகுதிகளுக்கு கட்டுப்பாட்டை எடுத்துச் செல்வதற்கு எளிதாக வகை செய்கிறது. switch கூற்று ஒன்றுக்கும் மேற்ப்பட்ட if else கூற்றுகளுக்கு மாற்றாக அமைந்துள்ளது. 

switch(கோவை)

{

      case constant 1:

           கூற்று (s);

           break;

      case constant 2:

           கூற்று (s);

           break;

      .

      .

      .

      .

      default:

                      கூற்று (s);

}

மேற்கண்ட தொடரியலில், கோவைமதிப்பீடு செய்யப்பட்டு, பெறப்பட்ட மதிப்பு ஏதேனும் ஒரு case கூற்றில் கொடுக்கப்பட்ட மாறிலியின் மதிப்புடன் பொருந்தியிருப்பின், அதனுடன் தொடர்புடைய கட்டளைத் தொகுப்பு நிறைவேற்றப்படும். இல்லையெனில் தேர்வுக்கு கீழே உள்ள கூற்றுகள் நிறைவேற்றப்படும். switch கூற்றின் இயங்கு முறை பாய்வுப்படமும் படம் 10.5ல் கொடுக்கப்பட்டுள்ளது.


விதிமுறைகள் :

1. switch கூற்றில் தரப்பட்டுள்ள கோவையின் விடை மாறிலி மதிப்பாக இருத்தல் வேண்டும் இல்லையெனில் அது ஒரு பிழையான வடிவமாகும். 

2. ஒரே மதிப்பு இரண்டு case கூற்றுகளில் அனுமதிக்கப்பட மாட்டாது. 

3. default கூற்று கட்டாயமில்லை. 

4. switch கூற்றின் நிரல் தொகுதியை நிறைவு செய்ய break கூற்று பயன்படுகிறது. நிரல் பாய்வு break கூற்றை அடையும் போது, switch கூற்றிலிருந்து வெளியேறி, switch கூற்றை தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ள நிரல் கூற்றுகளை இயக்கும். 

5. break கூற்று கொடுப்பது கட்டாயமில்லை. break கூற்று கொடுக்கப்படவில்லை எனில், case நிபந்தனை நிறைவேற்றப்படும் நிரல் கூற்றை தொடர்ந்து உள்ள அனைத்து கூற்றுகளும் கட்டுப்பாடின்றி இயங்கும். 

6. பின்னலான Switch கூற்றுகளும் அமைக்கப்படும்.


எடுத்துக்காட்டு 10.6 – switch கூற்றை விளக்கும் C++ நிரல் 

#include <iostream>

using namespace std;

int main()

{

      int num;

      cout << "\n Enter week day number: ";

      cin >> num;

      switch (num)

      {

           case 1 : cout << "\n Sunday"; break;

           case 2 : cout << "\n Monday"; break;

           case 3 : cout << "\n Tuesday"; break;

           case 4 : cout << "\n Wednessday"; break;

           case 5 : cout << "\n Thursday"; break;

           case 6 : cout << "\n Friday"; break;

           case 7 : cout << "\n Saturday"; break;

           default: cout << "\n Wrong input....";

      }

}

வெளியீடு:

Enter week day number: 6

Friday

11வது கணினி அறிவியல் : அலகு 10 : பாய்வுக் கட்டுப்பாடு