Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும்

இனப்பெருக்கப் புறஅமைப்பியல் - சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும் | 11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany

11 வது தாவரவியல் : அலகு 5 : இனப்பெருக்கப் புறஅமைப்பியல்

சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும்

தாவரவியல் : இனப்பெருக்கப் புறஅமைப்பியல் : மதிப்பீடு, பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / பதில்களுடன் சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள், 1 மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்களை முன்பதிவு செய்யுங்கள்

இனப்பெருக்கப் புறஅமைப்பியல்

வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்

 

மதிப்பீடு

 

1. முதன்மை வகைக்காட்டு, காணப்படாத போது, அசலற்ற தொகுப்பிலிருந்து பெறப்பட்ட மாதிரி பெயர்ச்சொல் இவ்வாறு அறியப்படுகிறது?

அ. ஹோலோடைப்

ஆ. நியோடைப்

இ. ஐசோடைப்

ஈ. பாராடைப்

 

2. மரபு வழி வகைப்பாடு எதனைப் பிரதிபலிப்பதால் மிகவும் விரும்பத்தக்க வகைப்பாடாக உள்ளது

அ. ஒப்பீட்டு உள்ளமைப்பியல்

ஆ. உற்பத்தி செய்யப்பட்ட பூக்களின் எண்ணிக்கையை

இ. ஒப்பீட்டுச் செல்லியல்

ஈ. பரிணாம உறவுமுறை

 

3. பல்வேறு வகைப்பட்ட தாவர நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் அடங்கிய வகைப்பாடு

அ. வேதிய வகைப்பாடு

ஆ. மூலக்கூறு வகைப்பாட்டு அமைப்பு முறை

இ. ஊநீர் சார் வகைப்பாடு (Serotaxonomy)

ஈ. எண்ணியல் வகைப்பாடு

 

4. பின் வரும் எந்தத் தாவரத்தின் வேர் முண்டுகளில் நைட்ரஜனை நிலை நிறுத்தும் இழை நுண்ணுயிரிகள் உள்ளன?

அ. குரோட்டலேரியா ஜன்சியா

ஆ. சைகஸ் ரெவலூட்டா

இ. சைசர் அரிட்டினம்

ஈ. கேசியுவரைனா ஈகுசிடிஃபோலியா

 

5. இருபக்கச்சீர் கொண்ட மலர்கள்

அ. சீரோஃபிஜியா

ஆ. தெவிஷியா

இ. டட்டுரா

ஈ. சொலானம் 


11 வது தாவரவியல் : அலகு 5 : இனப்பெருக்கப் புறஅமைப்பியல்