Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும்

கனிம ஊட்டம் - தாவரவியல் - சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும் | 11th Botany : Chapter 12 : Mineral Nutrition

11 வது தாவரவியல் : அலகு 12 : கனிம ஊட்டம்

சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும்

தாவரவியல் : கனிம ஊட்டம் - மதிப்பீடு, பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / பதில்களுடன் சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள், 1 மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்களை முன்பதிவு செய்யுங்கள்

கனிம ஊட்டம்

 

மதிப்பீடு

 

1. பொருத்தமான இணையைத் தேர்ந்தெடு

1. சிட்ரஸ் நுனிஅடி இறப்பு - (i) Mo

2. சாட்டை வால் நோய்- (ii) Zn

3. பழுப்புமையக் கருக்கல் நோய் - (iii) Cu

4. சிற்றிலை நோய் - (iv) B

அ) 1 (iii) 2 (ii) 3 (iv) 4 (i)

ஆ) 1 (iii) 2 (i) - 3 (iv) 4 (ii)

1 (i) 2 (iii) 3 (ii) 4 (iv)

ஈ) 1 (iii) 2 (iv) 3 (ii) 4 (i)

 

2. ஒரு தாவரத்திற்கு அனைத்துக் கனிமங்களும் வழங்கப்பட்டு Mn செறிவு மட்டும் அதிகமாக இருந்தால் ஏற்படும் குறைபாடு யாது?

அ) Fe, Mg உட்கொள்திறனை தடுக்கும் ஆனால் Ca தவிர

ஆ) Fe, Mg மற்றும் Ca உட்கொள்திறனை அதிகரிக்கும்.

இ) Ca உட்கொள்திறனை மட்டும் அதிகரிக்கும்.

ஈ) Fe, Mg மற்றும் Ca உட்கொள்திறனைத் தடுக்கும்.

 

3. மீண்டும் இடம்பெயராத தனிமம் எது?

அ) பாஸ்பரஸ்

ஆ) பொட்டாசியம்

) கால்சியம்

ஈ) நைட்ரஜன்

 

4. சரியானவற்றைப் பொருத்துக.

தனிமங்கள் : பணிகள்

A. மாலிப்டினம் : 1. பச்சையம்

B. துத்தநாகம் : 2. மெத்தியோனின்

C. மெக்னீசியம் : 3. ஆக்சின்

D. சல்ஃபர் : 4. நைட்ரோஜினேஸ்

அ) A-1 B-3 C-4 D-2

ஆ) A-2 B-1 C-3 D-4

) A-4 B-3 C-1 D-2

ஈ) A-4 B-2 C-1 D-3

 

5. சரியான கூற்றைக் கண்டறிக.

I. சிஸ்டைன், மெத்தியோனின் அமினோ அமிலத்திற்குச் சல்ஃபர் அவசியம்.

II. N,K,S மற்றும் Mo குறைபாடு செல்பிரிவை பாதிக்கிறது.

III. லெகூம் அல்லாத அல்னஸ் தாவரத்தில் பிரான்க்கியா பாக்டீரியம் காணப்படுகிறது. IV. நைட்ரஜன் நீக்கத்தில் பங்கேற்கும் நைட்ரோசோமோனாஸ் மற்றும் நைட்ரோபாக்டர்

அ) I, II சரி

ஆ) I, II, III சரி

I மட்டும் சரி

ஈ) அனைத்தும் சரி

11 வது தாவரவியல் : அலகு 12 : கனிம ஊட்டம்