Home | 12 ஆம் வகுப்பு | 12வது புவியியல் | கிராமப்புறக் குடியிருப்பின் வகைகள்

மனிதக் குடியிருப்புகள் - புவியியல் - கிராமப்புறக் குடியிருப்பின் வகைகள் | 12th Geography : Chapter 2 : Human Settlements

12 வது புவியியல் : அலகு 2 : மனிதக் குடியிருப்புகள்

கிராமப்புறக் குடியிருப்பின் வகைகள்

வடிவங்களின் அடிப்படையில் குடியிருப்புகளைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

கிராமப்புறக் குடியிருப்பின் வகைகள் (Classification of Rural Settlements)

வடிவங்களின் அடிப்படையில் குடியிருப்புகளைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

1. நெருக்கமான அல்லது குழுமிய குடியிருப்புகள்

நெருக்கமான குடியிருப்புகளில் வீடுகள் அருகருகே அமைந்துள்ளன. வழக்கமாக, வளமையான சமவெளிப்பகுதிகள் இத்தகைய நெருக்கமான அல்லது குழுமிய குடியிருப்புகளைக் கொண்டுள்ளன.

2. சிதறிய குடியிப்புகள்

இவ்வகைக் குடியிருப்புகளில் வீடுகள் இடைவெளி விட்டுக் காணப்படுவதுடன் வயல்வெளிகளோடு கலந்திருக்கும். இருப்பினும் சந்தை மற்றும் பிற செயல்பாடுகள் மையப்படுத்தப்பட்டு இருப்பதால் மக்கள் ஒன்று சேர்ந்து பங்கெடுப்பார்கள். 


12 வது புவியியல் : அலகு 2 : மனிதக் குடியிருப்புகள்