Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | நெறிமுறையின் சிக்கல்

12 வது கணினி அறிவியல் : அலகு 4 : நெறிமுறையின் யுக்திகள்

நெறிமுறையின் சிக்கல்

எடுத்துக்காட்டாக, A நெறிமுறை, n உள்ளீட்டு தரவின் அளவாக, இருப்பின் A ன் செயல்திறனை இரண்டு முக்கிய காரணிகளான (time) நேரம் மற்றும் இடம் ஆகியவை தீர்மானிக்கிறது.

நெறிமுறையின் சிக்கல்

எடுத்துக்காட்டாக, A நெறிமுறை, n உள்ளீட்டு தரவின் அளவாக, இருப்பின் A ன் செயல்திறனை இரண்டு முக்கிய காரணிகளான (time) நேரம் மற்றும் இடம் ஆகியவை தீர்மானிக்கிறது.

நேரம் காரணி - நெறிமுறைக்கு பொருத்தக் கூடிய முக்கிய செயல்பாடுகளின் எண்ணிக்கையை எண்ணுவதன் மூலம் நேரம் அளவிடப்படுகிறது, வரிசையாக்கம் நெறி முறையிலுள்ள பொருத்தங்களின் எண்ணிக்கை

இடகாரணி (space) – நெறிமுறைக்கு தேவைப்படும் மிக அதிகபட்ச நினைவக இடத்தை கணக்கிடுவதன் மூலம் இது அளவிடப்படுகிறது. நெறிமுறை f(n)-ன் சிக்கலானது, அது n அளவிலான உள்ளீட்டு தரவை எடுத்துக்கொண்டு இயங்கும் நேரம் மற்றும் நினைவகத்தில் அதற்கு தேவைப்படும் இட ஒதுக்கீடு பொறுத்தது.


1. நேரசிக்கல் (Time complexcity)

ஒரு நெறிமுறை செயலை செய்து முடிக்க எண்ணிக்கையே நெறிமுறையின் நேரசிக்கல் எனப்படும்.


2. இடசிக்கல் (space)

ஒரு நெறிமுறையின் செயல்பாடு முடியும்வரை அதற்கு தேவைப்படும் நினைவக இடமே இடச்சிக்கல் எனப்படும். நெறிமுறைக்கு தேவைப்படும் இடம் பின்வரும் இரு கூறுகளின் கூட்டுத் தொகையாகும்.

நிலையான பகுதி இது நெறிமுறைக்கு தேவையான தரவு மற்றும் மாறிகளை சேமிக்க பயன்படும் கூட்டு இடத்தை வரையறுக்கும். எடுத்துக்காட்டு நிரல் நெறிமுறையில் பயன்படுத்தப்படும் மாறிகள் மற்றும் மாறிலிகள்

மாறும் பகுதி சிக்கலின் அளவு மற்றும் சுழற்சிக்கு தேவைப்படும் அனைத்து மாறிகளின் கூட்ட இடத்தின் அளவை பொறுத்து 'n' வரையறுக்கப்படும். எடுத்துக்காட்டாக: என்ற மதிப்பின் தொடர் பெருக்களை தற்சுழற்சி மூலம் கண்டறிதல்.

12 வது கணினி அறிவியல் : அலகு 4 : நெறிமுறையின் யுக்திகள்