Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | கருத்துரு வினாக்கள் விடைகள்

இயக்கவிதிகள் | இயற்பியல் - கருத்துரு வினாக்கள் விடைகள் | 11th Physics : UNIT 3 : Laws of Motion

11வது இயற்பியல் : அலகு 3 : இயக்க விதிகள்

கருத்துரு வினாக்கள் விடைகள்

இயற்பியல் : இயக்க விதிகள் : புத்தக பயிற்சிக் கணக்குகள், தீர்க்கப்பட்ட எண்ணியல் கணக்குகள், தீர்வுகள் மற்றும் பதில்கள் : கருத்துரு வினாக்கள் விடைகள்

இயக்கவிதிகள் | இயற்பியல்

கருத்துரு வினாக்கள்

 

1. கார் ஒன்றின் உள்ளே இருந்து அக்காரைத் தள்ள முடியாது ஏன்?

விடை:  

ஓய்வு நிலையில் உள்ள காரினுள் உள்ள ஒருவரால் காரைத் தள்ளுவதற்கு கொடுக்கப் படும் விசையானது அகவிசையாகும். அகவிசை யானது ஒருபோதும் பொருளில் இயக்கத்தை ஏற்படுத்தாது. எனவே கார் ஒன்றின் உள்ளே இருந்து காரைத் தள்ள முடியாது. 


2. பரப்புகளை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் வழுவழுப்பாக்கினால் அவற்றின் உராய்வுத்தடை குறைவதற்குப் பதிலாக அதிகரிப்பதன் காரணம் என்ன? 

விடை:

பரப்புகளை அளவுக்கதிகமாக வழுவழுப்பாக்கும் போது, பரப்புகளுக்கிடையேயான தொடுதல் பரப்பு அதிகரிக்கிறது. 

இதன் விளைவாக இரு பரப்புகளிலும் உள்ள அதிக எண்ணிக்கையிலான அணுக்களும் மூலக் கூறுகளும் வலிமையான கவர்ச்சி விசையை அவற்றின் இடையே ஏற்படுத்த துவங்குவதால் உராய்வுவிசை அதிகரிக்கப்பட்டு உராய்வுத் தடை அதிகரிக்க காரணமாகிறது. 


3. ஒரே ஒரு தனித்த விசை இயற்கையில் தோன்றுமா? 

விடை:

ஒரே ஒரு தனித்த விசை இயற்கையில் தோன்றாது. ஏனெனில் நியூட்டன் மூன்றாவது விதிப்படி ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமானது மற்றும் எதிரானதுமான விசை ஒன்று உண்டு. எனவே விசை எப்போதும் சோடியாகவே தோன்றும். 


4. பாராசூட் மெதுவாகக் கீழே விழுவதன் காரணம் என்ன? 

விடை:

அதிக தொடுதல் பரப்புகள் கொண்ட பொருட் களான பாராசூட் (அ) இறகு பந்து போன்றவை மெதுவாகவே கீழே இறங்கும். ஏனெனில் அப்பொருட்கள் அதிகப்படியான காற்று உராய்வுத்தடைக்கு உட்படுத்தப்படும்.

இவ்வாறாக காற்றுத் தடை, உராய்வு விசை போன்றவை பொருட்கள் இயங்கும் திசைக்கு எதிர் திசையில் செயல்படுவதால் பாராசூட் கீழே இறங்கும் போது மெதுவாக இறங்குகிறது. 


5. பனிக்கட்டி மீது நடக்கும்போது நெருக்கமாக அடி எடுத்து வைக்க வேண்டும் ஏன்? 

விடை:

பனிக்கட்டியின் மீது அதிக இடைவெளி கொண்டு நடக்கும் போது அதிகப்படியான முன்னோக்கு மற்றும் பின்னோக்கு விசை செயல்பட்டு கீழே விழுந்து விடலாம். ஆனால் நாம் குறைவான முன்னோக்கு மற்றும் நடக்க வேண்டுமானால் குறைவான இடை வெளியில் நடக்க வேண்டும்.

எனவே பனிக்கட்டியில் நடக்கும் போது நெருக்கமாக அடி எடுத்து வைக்கவேண்டும். மேலும் இவ்வாறு நடக்கும் போது அதிக செங்குத்துவிசை செயல்பட்டு அதிக உராய்வு விசையை ஏற்படுத்தும்.


6. மனிதரொருவர் தரையில் நடக்கும்போது, மனிதரின் மீது செயல்படும் தரையின் உராய்வு விசை அவரின் இயக்கத்திசைக்கு எதிராகச் செயல்படும். சரியா? தவறா? 

விடை:

தவறு. மனிதரொருவர் தரையில் நடக்கும் போது அவரின் பாதமானது தரையில் பின்னோக்கி தள்ளப்படுகிறது.

முன்னோக்கி நடந்து கொண்டிருக்கும் மனிதரொருவர் தரையின் மீது பின்னோக்கு விசை செயல்படுத்துவதால் பாதத்தின் மீது உராய்வு விசை முன்னோக்கி செயல்படுகிறது. 

எனவே உராய்வு விசையானது மனிதனின் இயக்க திசையிலே செயல்படுகிறது.


7. உராய்வுக் குணகம் ஒன்றை விட அதிகமாக இருக்க முடியுமா? 

விடை:

உராய்வுக் குணகம் ஒன்றை விட அதிகமாக இருக்க முடியாது. ஏனெனில் சமதள பரப்புகளுக்கு உராய்வுக் குணகமானது ஒன்றைவிட குறைவா கவே இருக்கும். 

ஆனால் நுண்ணளவிலான மேடு, பள்ளங்களை கொண்டுள்ள சமதளமற்ற பரப்புகளில் உராய்வுக்குணகம் ஒன்றைவிட அதிகமாக இருக்கலாம்.


8. பொருள் மீது செயல்படும் விசையின் திசையைக் கொண்டு இயக்கத்திசையைக் கூற முடியுமா? 

விடை:

ஆம் (கூற முடியும்), நியூட்டன் இரண்டாம் வீதமானது அப்பொருளின் மீது செயல் படுத்தப் படும் விசைக்கு நேர்விகிதத்திலும் விசையின் திசையிலேயே பொருளின் இயக்கத்திசையும் அமையும்.


9. துகள் அமைப்பின் உந்தம் எப்பொழுதும் மாறாது. சரியா, தவறா?

விடை:

சரி. நியூட்டன் இரண்டாம் விதிப்படி பொருளின் உந்தமாறுபாட்டு வீதமானது செயல் படுத்தப்படும் விசைக்கு நேர்விகிதத்தில் அமையும் எனவே துகள் அமைப்பின் மீது எந்தவொரு புறவிசையுமே செயல்படுத்தாத வரையில் துகள் அமைப்பின் மொத்த உந்தம் மாறாது.


11வது இயற்பியல் : அலகு 3 : இயக்க விதிகள்