Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | நுகர்வு பகுப்பாய்வு: அறிமுகம்

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 2 : நுகர்வு பகுப்பாய்வு

நுகர்வு பகுப்பாய்வு: அறிமுகம்

நுகர்வு ஒரு முக்கியமான பொருளாதார நடவடிக்கை ஆகும். நுகர்வின் தன்மை மற்றும் அளவின் அடிப்படையில் மக்களின் வாழ்க்கைத் தரம் தீர்மானிக்கப்படுகிறது.

அத்தியாயம் 2

நுகர்வுப் பகுப்பாய்வு

"பொருளியல் நடவடிக்கையின் ஒரே நோக்கம் நுகர்வே"

-ஜே.எம்.கீன்ஸ்


கற்றல் நோக்கங்கள்

1 விலையில் மாற்றங்கள் நிகழும்போது நுகர்வோரின் போக்கினைப் புரிதல்.

2 எண்ணளவைப் பயன்பாட்டு ஆய்வு மற்றும் தரவரிசை ஆய்வு முறைகளைப் பயன்படுத்தி நுகர்வோர் சமநிலையை அறிதல்.

அறிமுகம்

நுகர்வு ஒரு முக்கியமான பொருளாதார நடவடிக்கை ஆகும். நுகர்வின் தன்மை மற்றும் அளவின் அடிப்படையில் மக்களின் வாழ்க்கைத் தரம் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவரின் விருப்பங்களை நிறைவு செய்யும் சக்தி நுகர்வுக்கு உண்டு.

"பண்டங்கள் மற்றும் பணிகளை பயன்படுத்துவதன் மூலம் விருப்பங்கள் நிறைவடையும்".

பொருளியலில் நாம் நுகர்வை நுண்ணியல் மற்றும் பேரியல் அளவிலும் கற்றுக் கொள்கிறோம்.

பொருளாதார அறிவியலின் தொடக்கம் நுகர்வே ஆகும். நுகர்வு இல்லாது உற்பத்தியோ, பரிமாற்றமோ, பகிர்வோ சாத்தியமில்லை. உற்பத்தியின் முடிவு நுகர்வு ஆகும். மக்களின் விருப்பங்களை நிறைவு செய்ய உற்பத்தியாளர்கள் பண்டங்களை உற்பத்தி செய்கின்றனர்.


11வது பொருளாதாரம் : அத்தியாயம் 2 : நுகர்வு பகுப்பாய்வு