Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை

அலகு 21 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை | 8th Science : Chapter 21 : Crop Production and Management

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 21 : பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை

பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை

கற்றல் நோக்கங்கள் இப்பாடத்தினைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன: ❖ வேளாண் செயல்பாடுகளை அறிதல். ❖ பயிர்ப்பெருக்கத்தின் அடிப்படைச் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளல் ❖ பயிர்ச்சுழற்சியின் முக்கியத்துவத்தை அறிதல். ❖ விதை வங்கி, விதைப் பந்துகள் மற்றும் விதைகளைப் பதப்படுத்துதலின் முக்கியத்துவத்தை அறிதல். ❖ ARI, ICAR மற்றும் KVK போன்ற வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களைப் பற்றி அறிதல். ❖ உயிரிக் கட்டுப்பாட்டு முறைகளின் முக்கியத்துவங்களைப் பட்டியகிருதல்.

அலகு 21

பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை


 

கற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தினைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:

வேளாண் செயல்பாடுகளை அறிதல்.

பயிர்ப்பெருக்கத்தின் அடிப்படைச் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளல்

பயிர்ச்சுழற்சியின் முக்கியத்துவத்தை அறிதல்.

விதை வங்கி, விதைப் பந்துகள் மற்றும் விதைகளைப் பதப்படுத்துதலின் முக்கியத்துவத்தை அறிதல்.

ARI, ICAR மற்றும் KVK போன்ற வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களைப் பற்றி அறிதல்.

உயிரிக் கட்டுப்பாட்டு முறைகளின் முக்கியத்துவங்களைப் பட்டியகிருதல்.



 

அறிமுகம்

மனித வரலாறு உணவைத் முழுவதும் தேடவேண்டிய கட்டாயத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். பசுந்தாவரங்கள் ஒளிச்சேர்க்கை எனும் செயல் மூலமாக தங்களது உணவைத் தயாரிக்கின்றன. மனிதர்களும், விலங்குகளும் தங்களது உணவை தாங்களே உற்பத்தி செய்யமுடியாது. எனவே, மனிதர்களும், விலங்குகளும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாவரங்களைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. பல்வேறு உடலியல் செயல்பாடுகளுக்கு உயிரினங்கள் உணவிலுள்ள ஆற்றலைப் பயன்படுத்துகின்றன. தாவரங்களும், விலங்குகளுமே அனைத்து உயிரினங்களுக்கும் உணவு ஆதாரங்களாக உள்ளன. பெருகி வரும் அதிகளவு மக்கள் தொகைக்கு உணவளிப்பதற்கு, உற்பத்தி, முறையான திட்டமிடல், நிர்வாகம் மற்றும் பகிர்மானம் ஆகியவை அவசியமாகும். எதிர்கால சந்ததியினருக்காக உணவு ஆதாரங்களின் தரம் மற்றும் அளவைப் பேணுதல் மற்றும் வளரும் மக்கள் தொகைக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்தலில் விவசாயிகள் பெரும் சவால்களைச் சந்திக்கின்றனர். தரமான மற்றும் அதிக அளவிலான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வதற்குத் தேவையான புதிய தொழில்நுட்பத்தை அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் உருவாக்குகின்றன. இப்பாடத்தில், விரசாயச் செயல்முறைகள், பயிர்ச்சுழற்சி, விதைகள், உயிரி-உரங்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களின் பணிகள் ஆகியவற்றைக் குறித்து காண்போம்.

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 21 : பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை