Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | தரவு அருவமாக்கம் - அறிமுகம்

12 வது கணினி அறிவியல் : அலகு 2 : தரவு அருவமாக்கம்

தரவு அருவமாக்கம் - அறிமுகம்

தரவு அருவமாக்கம் கணினி அறிவியலில் சக்தி வாய்ந்த கருத்துருவாகும். இது நிரலர்களை, நிரல் குறியீட்டை ஒரு பொருளாக கருத வழிச் செய்கிறது.

அலகு I

பாடம் 2

தரவு அருவமாக்கம்

 

கற்றலின் நோக்கங்கள்

இந்தப் பாடத்தைக் கற்றபின், மாணவர்கள் கற்றுக்கொள்வது,

• அருவமாக்க தரவு கட்டமைப்பை புரிந்து கொள்ளுதல்.

• அருவமாக்க தரவு வகை

• கான்கீரிட் மற்றும் அருவமாக்கம் தரவு வகை செயல்படுத்தலில் உள்ள வேற்றுமைகள்.

• இணை (Pairs)-ன் பயன்பாடு

• கட்டுருவில் தரவு அருவமாக்கம்

 

தரவு அருவமாக்கம் அறிமுகம்

தரவு அருவமாக்கம் கணினி அறிவியலில் சக்தி வாய்ந்த கருத்துருவாகும். இது நிரலர்களை, நிரல் குறியீட்டை ஒரு பொருளாக கருத வழிச் செய்கிறது. உதாரணமாக வாகனம், பென்சில் மக்கள் போன்றவற்றை போல் நிரலையும் ஒரு பொருளாகக் கருதலாம். நிரலர்கள் நிரல் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றது என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை, இது அவர்கள் அப்பொருள் என்ன செய்கின்றது என்று அறிந்திருந்தால் போதும்.

குறிப்பாக பல நிரலர்கள் ஈடுபடும் செயல்திட்டத்தை (Project) செயல்படுத்தும் போது இது முக்கியமானதாகும். இங்கு செயல் திட்டம் என்பது நிரலாக்கத்தை குறிக்கிறது. தரவு அருவமாக்கத்தில் குழு உறுப்பினர்கள், குறிமுறையை புரிந்து கொள்ள ஒவ்வொரு வரியாக வாசிக்க தேவையில்லை, அவர்கள் அது ஒரு பணியினை செய்கிறது என்று கருதி கொண்டால் போதும்.

அருவமாக்கம் நிரலுக்கு கூறுநிலைமையை வழங்குகிறது. (ஒரு நிரல் பல தொகுதிகளாக பிரிக்கப்படுவது கூறு நிலையாகும்) இனக்குழுக்கள் போன்றவை அருவமாக்க தரவு வகையின் (“Abstract Data Types,” (ADT)) உருவமைப்பாகும். 

12 வது கணினி அறிவியல் : அலகு 2 : தரவு அருவமாக்கம்