அலகு 6 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - பாதுகாப்பு | 8th Social Science : Civics : Chapter 6 : Defence & Foreign Policy
பாதுகாப்பு
அறிமுகம்
இந்தியா
அமைதியை விரும்பும் ஒரு நாடு. பொதுவாக, இந்தியா அனைத்து நாடுகளிடமும் குறிப்பாக அண்டை
நாடுகளிடம் நல்லுறவைப் பேணுகிறது. அதேநேரத்தில் அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து இந்திய
எல்லையைப் பாதுகாப்பதற்கு, இந்தியா தன் பாதுகாப்பைப் பலப்படுத்துகிறது. எனவே இந்திய
அரசு பாதுகாப்புத் துறைக்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. இப்பாடத்தில் இந்திய
நாட்டின் பல்வேறு விதமான பாதுகாப்புப் படைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
பாதுகாப்பு அமைப்பின் அவசியம்
ஒவ்வொரு
நாட்டின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அதன் தேசிய பாதுகாப்பு மிகவும்
அவசியமானது ஆகும். இது நாட்டின் அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும் மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்தது ஆகும்.
இந்திய பாதுகாப்புச் சேவைகள்