Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | ஈரம் உறிஞ்சிக் கரைதல்

10வது அறிவியல் : அலகு 9 : கரைசல்கள்

ஈரம் உறிஞ்சிக் கரைதல்

சில சேர்மங்கள் சாதாரண வெப்பநிலையில், வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும் போது அதிலுள்ள ஈரத்தை உறிஞ்சி முழுவதும் கரைகின்றன. அத்தகைய சேர்மங்கள் ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் எனப்படும். இப்பண்பிற்கு ஈரம் உறிஞ்சிக் கரைதல் என்று பெயர்.

ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் அவற்றின் படிகப் பண்பை இழக்கின்றன. அவை, முழுமையாக கரைந்து தெவிட்டியக்கரைசலை உருவாக்குகின்றன. ஈரம் உறிஞ்சிக் கரைதல் அதிகமாக நிகழும் இருக்கும் சூழ்நிலைகள்

1) குறைந்த வெப்பநிலை.

2) அதிக வளிமண்டல ஈரப்பதம்.

உதாரணமாக, சோடியம் ஹைட்ராக்ஸைடு (NaOH), பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு (KOH), மற்றும் ஃபெர்ரிக் குளோரைடு (FeCl3).

10வது அறிவியல் : அலகு 9 : கரைசல்கள்