தயாரிப்பு பகுப்பாய்வு | பொருளாதாரம் - சிக்கனமின்மைகள் | 11th Economics : Chapter 3 : Production Analysis

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 3 : உற்பத்தி பகுப்பாய்வு

சிக்கனமின்மைகள்

பேரளவு உற்பத்தியினால் ஒரு நிறுவனத்திற்கோ குழு நிறுவனங்களுக்கோ அல்லது ஒரு அமைப்பிற்கோ வரும் இழப்பு சிக்கனமின்மைகள் எனப்படும்.

சிக்கனமின்மைகள் (Diseconomies of Scale)

பேரளவு உற்பத்தியினால் ஒரு நிறுவனத்திற்கோ குழு நிறுவனங்களுக்கோ அல்லது ஒரு அமைப்பிற்கோ வரும் இழப்பு சிக்கனமின்மைகள் எனப்படும். இவை பண்டங்கள் மற்றும் பணிகளின் சராசரி உற்பத்திச் செலவினை அதிகரிக்கின்றன. இவற்றினால், சந்தைப்படுத்தப்படும் பொருட்களின் அளிப்பின் அளவும் வேகமும் குறையலாம். சிக்கனமின்மைகள் இரு வகைப்படும்.

1. அகச் சிக்கனமின்மைகள் 

2. புறச் சிக்கனமின்மைகள்


அகச் சிக்கனமின்மைகள்

ஒரு நிறுவனம் உத்தம நிலைக்கு மேலும் தொடர்ந்து விரிவடைந்து செல்லும்போது, பொருளாதார சிக்கனங்கள் மறைவதுடன் சிக்கனமின்மைகள் தொடங்குகின்றன.


புறச் சிக்கனமின்மைகள்

புறச் சிக்கனமின்மைகள் என்பது ஒரு நிறுவனத்திற்கு வெளியே ஏற்படும் நிகழ்வுகள் காரணமாக ஒரு நிறுவனத்திற்கு ஏற்படும் இடையூறுகள் ஆகும். உதாரணமாக, பேருந்து வேலை நிறுத்தம் காரணமாக தொழிலாளர்கள் நிறுவனத்திற்கு சரியான நேரத்தில் வேலைக்குச் செல்ல இயலவில்லை. ஒரு குறிப்பிட்ட பகுதியில் புதிதாக உருவாக்கப்படும் தொழில் நிறுவனங்களின் காரணமாக பிற நிறுவனங்களின் வாடகை உயர்த்தப்படலாம். இவ்வாறாக, ஒரு நிறுவனத்திற்கு வெளியில் நிகழும் நிகழ்வுகள், அந்த நிறுவனத்தின் செலவைக் கூட்டினாலோ,இழப்பை ஏற்படுத்தினாலோ, அவை புறச்சிக்கனமின்மைகள் எனப்படும்.


11வது பொருளாதாரம் : அத்தியாயம் 3 : உற்பத்தி பகுப்பாய்வு