அலகு 5 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - மின்னியல் | 8th Science : Chapter 5 : Electricity

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 5 : மின்னியல்

மின்னியல்

கற்றல் நோக்கங்கள் இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன: ❖ மின்துகள்களின் அடிப்படைப் பண்புகளைப் பற்றி அறிந்து கொள்ளல். ❖ இரு பொருள்களுக்கிடையே மின்துகள்கள் இடமாற்றமடைவதை விளக்குதல். ❖ நிலைமின்காட்டி செயல்படும் முறையினைப் புரிந்து கொள்ளல். ❖ மின்னோட்டத்தின் விளைவுகளை அறிந்து கொள்ளல். ❖ பலவகை மின்சுற்றுகளை உருவாக்குதல் ❖ மின்சாரத்தின் பயன்பாடுகளை வரிசைப்படுத்துதல்.

அலகு 5

மின்னியல்


 

கற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:

மின்துகள்களின் அடிப்படைப் பண்புகளைப் பற்றி அறிந்து கொள்ளல்.

இரு பொருள்களுக்கிடையே மின்துகள்கள் இடமாற்றமடைவதை விளக்குதல்.

நிலைமின்காட்டி செயல்படும் முறையினைப் புரிந்து கொள்ளல்.

மின்னோட்டத்தின் விளைவுகளை அறிந்து கொள்ளல்.

பலவகை மின்சுற்றுகளை உருவாக்குதல்

மின்சாரத்தின் பயன்பாடுகளை வரிசைப்படுத்துதல்.


 

அறிமுகம்

அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களும் தனிமங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனிமமும் அணுக்களால் ஆனது. அணுக்களே ஒரு தனிமத்தின் மிகச்சிறிய அலகு ஆகும். அணுவை அதனைவிடச் சிறிய கூறுகளாகப் பிரிக்க இயலாது என அறிவியல் அறிஞர் ஜான் டால்டன் கருதினார். ஆனால், ரூதர்போர்டின் தங்க இழை சோதனைக்குப்பின் அணுவினுள் புரோட்டான், எலக்ட்ரான் மற்றும் நியூட்ரான் போன்ற மின்துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பொருள்களிலுள்ள எலக்ட்ரான்களின் ஓட்டமே மின்னோட்டத்திற்குக் மின்னோட்டம் காரணமாகிறது. மின்னாற்றலை இந்த அல்லது மின்சாரத்தை உருவாக்குகிறது. மின்னாற்றலை நம்முடைய அன்றாடத் தேவைகளுக்கு நாம் பயன்படுத்துகிறோம். மின் விளக்குகள், மின் விசிறிகள், மின் சலவைப் பெட்டி, சலவை இயந்திரம், குளிர்சாதனப் பெட்டி போன்ற உபகரணங்கள் மின் ஆற்றலினால் செயல்படும் சாதனங்களுள் சில ஆகும். இந்தப் பாடத்தில் மின்துகள்கள் பற்றியும் அவை பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு எவ்வாறு இடமாற்றமடைகின்றன என்பதைப் பற்றியும் கற்க இருக்கிறீர்கள்.மேலும், மின்சுற்றுகள் மற்றும் மின்னோட்டத்தின் விளைவுகளைப் பற்றியும் கற்றுக்கொள்ள இருக்கிறீர்கள்.

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 5 : மின்னியல்