தென்னிந்தியா - வரலாறு - எல்லோரா - அஜந்தா - மாமல்லபுரம் | 11th History : Chapter 9 : Cultural Development in South India
எல்லோரா - அஜந்தா - மாமல்லபுரம்
மகாராஷ்டிர மாநிலத்தின் ஒளரங்காபாத் மாவட்டத்தில் எல்லோரா, அஜந்தா என்னுமிடங்களில் திரளாகக்குகைகளும் கோவில்களும் அமைந்துள்ளன. எல்லோரா குகைக் கோவில்கள் அவற்றின் சிற்பங்களுக்காகப் பெயர்பெற்றவை. அஜந்தா குகைக் கோவில்கள் அவற்றின் ஓவியங்களுக்காகப் புகழ் பெற்றவை. இக்கோவில்களின் காலம் சுமார் பொ.ஆ. 500-950 ஆகும். ஆனால், குகைக் கோவில்களை உருவாக்கும் நடவடிக்கை இதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டிருக்க வேண்டும். முதல் குகைக்கோவில் ஆசீவகர்ளுக்காக உருவாக்கப்பட்டது. சில கோவில்கள் முற்றுப்பெறாதவையாகும்.