Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | நிறுவனத்தின் சமநிலை நிபந்தனை

பொருளாதாரம் - நிறுவனத்தின் சமநிலை நிபந்தனை | 11th Economics : Chapter 5 : Market Structure and Pricing

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 5 : அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும்

நிறுவனத்தின் சமநிலை நிபந்தனை

நிறுவனத்தின் சமநிலை என்பது, நிறுவனம் அடையும் உச்ச இலாபம் பெறும் நிலையைக் குறிக்கும்.
நிறுவனத்தின் சமநிலை நிபந்தனை

நிறுவனத்தின் சமநிலை என்பது, நிறுவனம் அடையும் உச்ச இலாபம் பெறும் நிலையைக் குறிக்கும். உச்ச இலாபம் பெறும் நிலையைக் காண இரு அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

1. மொத்தச் செலவு வளைகோடு அணுகுமுறை 

2. இறுதிநிலை செலவு வளைகோடு அணுகுமுறை



1. மொத்த செலவு வளைகோடு அணுகுமுறை


TC & TR அணுகுமுறையில், TC மற்றும் TRக்கு இடையே உள்ள வேறுபாட்டை கண்டறிந்து ஒரு நிறுவனம் ஈட்டும் இலாபமானது கணக்கிடப்படுகிறது. சமநிலை என்பது TC மற்றும் TRக்கு இடையே உள்ள இடைவெளி அதிகமாக இருக்கும் புள்ளியில் நிகழும் (EN). பொதுவாக உச்சபட்ச இலாபத்தை கணக்கிட TC – TR முறையை கடைப்பிடிப்பது கிடையாது. ஆகையால் இலாபம் அல்லது நட்டத்தை கணக்கிட பொருளியல் வல்லுநர்கள் MC = MR அணுகுமுறையை பயன்படுத்துகின்றனர்.


2. இறுதிநிலை செலவு வளைகோடு அணுகுமுறை

இந்த அணுகுமுறையில், ஒரு நிறுவனம் சமநிலை அடைய கீழ்க்கண்ட இரு நிபந்தனைகள் சரிபார்க்கப்படுகின்றன.


1. MC = MR

இங்கு ஒரு அனுமானமான சூழ்நிலை தரப்பட்டுள்ளது. பகுத்தறிவுள்ள விற்பனையாளர் உற்பத்தி அளவு 1-ல் இருக்கும்போது சமநிலையை அடைய மாட்டார். இந்த புள்ளியில் MC = MR ஆக இருந்த போதிலும், அவர் உற்பத்தியை தொடருவார். உற்பத்தியை தொடாச்சியாக மேற்கொள்ளும்போது இலாபம் அதிகரிக்கிறது. 1க்கு அதிகமான உற்பத்தியை மேற்கொள்ளும்போது அலகு 5 வரை MC < MR, இருப்பதால் உற்பத்தியாளர் தொடர்ச்சியாக உற்பத்தியை மேற்கொள்வார். உற்பத்தி 5 க்கு மேல் போனால் MC > MRஆக இருக்கும். இதனால் உற்பத்தியாளர் சமநிலையை அடைய மாட்டார்; நட்டம் ஏற்படும். எனவே

MC = MR என்பது சமநிலைக்கான முதல் நிபந்தனை ஆகும். (குறிப்பு: இந்த நிபந்தனை தேவையானது; ஆனால் போதுமான நிபந்தனை அல்ல) 

2. MC கோடு MR கோட்டை கீழிருந்து மேலாக வெட்ட வேண்டும்

நிறைவு போட்டியில் ஒரு நிறுவனத்தின் விலை கோடு படுகிடைகோடாக அமைந்திருக்கும். (இதுவே சராசரி வருவாய் (AR) மற்றும் இறுதிநிலை வருவாய் (MR) கோடாகும்).

நிறைகுறை போட்டியில் ஒரு நிறுவனத்தின் விலை கோடு சரிந்து செல்லும் கோடாக இருக்கும். MC கோடு U வடிவத்தில் இருக்கும்; மற்றும் MR கோட்டை இரண்டு புள்ளியில் வெட்டுகிறது. புள்ளி Aல் மேலிருந்து வெட்டுகிறது. புள்ளி B-ல் கீழிருந்து வெட்டுவதாக வரைபடத்தில் காண்கிறோம். புள்ளி B-ல் சமநிலைக்கான நிபந்தனை முழுயைாக பூர்த்தியடைகிறது. எனவே எல்லா அங்காடிகளுக்கும் சமநிலை பெற இரண்டு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. அதாவது MC=MR மற்றும் MC கோடு MR கோட்டை கீழிருந்து வெட்டிச் செல்லவேண்டும்.



11வது பொருளாதாரம் : அத்தியாயம் 5 : அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும்