Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | இந்தியாவில் புள்ளியியலின் வளர்ச்சி

பொருளாதாரம் - இந்தியாவில் புள்ளியியலின் வளர்ச்சி | 12th Economics : Chapter 12 : Introduction to Statistical Methods and Econometrics

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 12 : புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம்

இந்தியாவில் புள்ளியியலின் வளர்ச்சி

இந்தியாவில் சந்திரகுப்த மௌரியர் காலத்திலேயே புள்ளியியலைப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன. அவர் காலத்தில் பிறப்பு, இறப்பு பதிவுகளை உள்ளடக்கிய உயிர்ப்புள்ளியியல் பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வந்தன.

இந்தியாவில் புள்ளியியலின் வளர்ச்சி


இந்தியாவில் சந்திரகுப்த மௌரியர் காலத்திலேயே புள்ளியியலைப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன. அவர் காலத்தில் பிறப்பு, இறப்பு பதிவுகளை உள்ளடக்கிய உயிர்ப்புள்ளியியல் பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வந்தன. கி.மு. 300ற்கு முன்பே இதைப்பற்றிய செய்திகள் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. அக்பரின் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட புள்ளிவிவர மற்றும் நிர்வாகவிவர விசாரணைகள் பற்றி "அயினி அக்பரி" (Ain-e-Akbari, 1596-97) என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. நவீன புள்ளியியலின் நிறுவனர் மற்றும் இந்திய புள்ளியியலின் தந்தை என்றழைக்கப்படுபவர் பி.சி. மஹலநோபிஸ் ஆவார். 2007லிருந்து அவரின் பிறந்த நாளான ஜுன் 29 புள்ளியியல் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.


12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 12 : புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம்