பருவம் 2 அலகு 2 | வரலாறு | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 6th Social Science : History : Term 2 Unit 2 : Great Thinkers and New Faiths

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 2 அலகு 2 : மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

வினா விடை

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 2 அலகு 2 : மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

பயிற்சிகள்

 

I சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

 

1 பௌத்த நூல்களின் பெயர் என்ன?

அ) அங்கங்கள்

ஆ) திரிபீடகங்கள்

இ) திருக்குறள்

ஈ) நாலடியார்

[விடை : ஆ) திரிபீடகங்கள்]

 

2. சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்?

அ) ரிஷபர்

ஆ) பார்சவநாதர்

இ) வர்தமானர்

ஈ) புத்தர்

[விடை : அ) ரிஷபர்]

 

3. சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?

அ) 23

ஆ) 24

இ) 25

ஈ) 26

[விடை : ஆ) 24]

 

4. மூன்றாம் பௌத்தசபை எங்குக் கூட்டப்பட்டது?

அ) ராஜகிரகம்

ஆ) வைசாலி

இ) பாடலிபுத்திரம்

ஈ) காஷ்மீர்

விடை : இ) பாடலிபுத்திரம்]

 

5. புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார்?

அ) லும்பினி

ஆ) சாரநாத்

இ) தட்சசீலம்

ஈ) புத்தகயா

[விடை : ஆ) சாரநாத்]

 

II. கூற்றோடு காரணத்தைப் பொருத்துக / பொருத்தமான விடையை தேர்ந்தெடு.


1 கூற்று: ஒரு சாதாரண மனிதரால் உபநிடதங்களைப் புரிந்து கொள்ள இயலாது.

காரணம்: உபநிடதங்கள் மிகவும் தத்துவம் சார்ந்தவை.

அ) கூற்றும் அதன் காரணமும் சரியானவை.

ஆ) கூற்று தவறானது.

இ) கூற்று சரியானது; ஆனால் அதற்கான காரணம் தவறானது.

ஈ) கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு.

[விடை :அ) கூற்றும் அதன் காரணமும் சரியானவை.


2. கூற்று: ஜாதகங்கள் புகழ் பெற்ற கதைகளாகும்

காரணம்: அஜந்தா குகையின் சுவர்களிலும் மேற்கூரையிலும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஜாதகக் கதைகளைச் சித்தரிக்கின்றன.

அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி.

ஆ) கூற்று தவறு.

இ) கூற்று சரி; ஆனால் அதற்கான காரணம் தவறு.

ஈ) கூற்றும் அதற்கான காரணம் ஆகிய இரண்டும் தவறு.

[விடை : அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி]

 

3. சரியான விடையைக் கண்டறியவும்.

விகாரைகள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டன?

1. கல்விக் கூடமாக

2. பௌத்தத் துறவிகளின் தங்குமிடம்

3. புனிதப் பயணிகள் தங்குவதற்காக

4. வழிபாட்டுக் கூடம்

அ) 2 சரி

ஆ) 1 மற்றும் 3 சரி

இ) 1, 2, 4 ஆகியவை சரி

ஈ) 1 மற்றும் 4 சரி

[விடை : இ) 1, 2, 4 ஆகியவை சரி]

 

4 சமணமும் பௌத்தமும் உருவாவதற்கு கீழ்க்கண்டக் கூற்றுகளைக் காரணமாகக் கருதலாமா?

1. வேள்விச்சடங்குகள் பெருஞ்செலவு மிக்கதாக இருந்தன.

2. மூடநம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் சாதாரண மனிதர்களைக் குழப்பமுறச்

செய்தன.

மேற்சொல்லப்பட்ட கூற்றில்/கூற்றுகளில், எது/எவை சரியானது/சரியானவை.

அ) 1 மட்டும்

ஆ) 2 மட்டும்

இ) 1 மற்றும் 2

ஈ) 1 மற்றும் 2 ம் இல்லை

[விடை : இ) 1 மற்றும் 2]

 

5. சமணம் குறித்த கீழ்க் கண்டவற்றுள் எது சரியானது?

அ) உலகைக் கடவுள் தோற்றுவித்தார் என்பதைச் சமணம் மறுக்கிறது.

ஆ) உலகைத் தோற்றுவித்தவர் கடவுள் என்பதை சமணம் ஒத்துக் கொள்கிறது.

இ) சமணத்தின் அடிப்படைத் தத்துவம் சிலைவழிபாடாகும்

ஈ) இறுதித்தீர்ப்பு எனும் நம்பிக்கையைச் சமணம் ஒத்துக் கொள்கிறது.

[விடை : அ) உலகைக் கடவுள் தோற்றுவித்தார் என்பதைச் சமணம் மறுக்கிறது]

 

6. பொருந்தாததை வட்டமிடு.

பார்சவா, மகாவீரர், புத்தர், ரிஷபர்

[விடை : புத்தர்]

 

7. தவறான இணையைக் கண்டுபிடி

அ) அகிம்சை - காயப்படுத்தாமல் இருத்தல்

ஆ) சத்யம் - உண்மைபேசுதல்

இ) அஸ்தேயம் - திருடாமை

ஈ) பிரம்மச்சரியம் - திருமண நிலை

[விடை : ஈ) பிரம்மச்சரியம் - திருமண நிலை]

 

8. சித்தார்த்த கௌதமர் குறித்து கீழே காண்பனவற்றுள் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் சரி.

அ) இந்து மதத்தை நிறுவியவர் அவரே.

ஆ) அவர் நேபாளத்தில் பிறந்தார்.

இ) அவர் நிர்வாணம் அடைந்தார்.

ஈ) அவர் சாக்கியமுனி என்று அறியப்பட்டார்.

[விடை : அ) இந்து மதத்தை நிறுவியவர் அவரே]


III கோடிட்ட இடங்களை நிரப்புக.

 

1. மகாவீரரின் கோட்பாடு சமணம் என்று அழைக்கப்படுகிறது.

2 நிர்வாண நிலை என்பது துன்பங்களிலிருந்தும் மறுபிறவியிலிருந்தும் விடுதலை பெற்ற ஒரு நிலை.

3 பௌத்தத்தை நிறுவியவர் கௌதம புத்தர் ஆவார்.

4. காஞ்சிபுரத்திலுள்ள, திருப்பருத்திக்குன்றம் என்னும் கிராமம் ஒரு காலத்தில் ஜைனக்காஞ்சி என்று அழைக்கப்பட்டது.

5 ஸ்தூபி என்பது புத்தரின் உடல் எச்சங்கள் மீது கட்டப்பட்டனவாகும்.

 

IV. சரியா? தவறா?

 

1. புத்தர் கர்மாவை நம்பினார். விடை : சரி

2. புத்தருக்குச் சாதி முறை மேல் நம்பிக்கை இருந்தது. விடை : தவறு

3 கௌதம சுவாமி, மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தார். விடை : சரி

4 விகாரைகள் என்பன கோவில்களாகும். விடை : தவறு

5. அசோகர் பௌத்த மதத்தைப் பின்பற்றினார். விடை : சரி

 

V. பொருத்துக.

1. அங்கங்கள் - வர்தமானர்

2. மகாவீரர் - துறவிகள்

3. புத்தர் - பௌத்தக் கோவில்கள்

4. சைத்தியம் -  சாக்கியமுனி

5. பிட்சுக்கள் - சமண நூல்

 

விடைகள்

1. அங்கங்கள் - சமண நூல்

2. மகாவீரர் - வர்தமானர்

3. புத்தர் - சாக்கியமுனி

4. சைத்தியம் - பௌத்தக் கோவில்கள்

5. பிட்சுக்கள் – துறவிகள்

 

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

 

1. சமணத்தின் மூன்று ரத்தினங்கள் எவை?

• நன்னம்பிக்கை

• நல்லறிவு

• நற்செயல்

 

2. பௌத்தத்தின் இரு பிரிவுகள் எவை?

• ஹீனயானம்

• மகாயானம்

 

3. 'ஜினா' என்பதின் பொருள் என்ன?

‘ஜினா’ என்பதின் பொருள் தன்னையும் வெளியுலகத்தையும் வெல்வது என்பதாகும்.


4. பௌத்தத்திற்கும் சமணத்திற்கும் உள்ள இரண்டு பொதுவான கூறுகளை எழுதுக.

• வேதங்களின் ஆதிக்கத்தை வெறுத்தல்.

• இரத்த பலிகளை எதிர்த்தல்.

 

5. பௌத்த சங்கத்தைப் பற்றி குறிப்பெழுதுக.

• புத்தர் தனது கருத்துக்களைப் பரப்புவதற்காக நிறுவிய அமைப்பு சங்கம்.

• சங்கத்தின் உறுப்பினர்களான துறவிகள் ‘பிட்சுக்கள்' என அழைக்கப்பட்டனர்.

• மிக எளிய வாழ்க்கை மேற்கொண்டனர்.

 

6. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த சீனப் பயணியின் பெயரைக் குறிப்பிடுக.

• யுவான் சுவாங்

 

7. சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பெண் ஜைனத் துறவியின் பெயர் என்ன?

• கவுந்தியடிகள்

 

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

 

1. பௌத்தத்தின் எட்டு நெறிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

• நல்ல நம்பிக்கை

• நல்ல எண்ணம்

• நல்ல பேச்சு

• நல்ல செயல்

• நல்ல வாழ்க்கை

• நல்ல முயற்சி

• நல்ல அறிவு

• நல்ல தியானம்

 

2. சமணத்தின் முக்கியமான ஐந்து நடத்தை விதிகள் எவை?

• அகிம்சை  - எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது

• சத்யா  - உண்மையை மட்டுமே பேசுதல்

• அஸ்தேய  - திருடாமை

• அபரிக்கிரகா  - பணம், பொருள், சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமல் இருப்பது.

• பிரம்மச்சரியா  - திருமணம் செய்து கொள்ளாமை.

 

3. பௌத்தத்தின் நான்கு பேருண்மைகளை எடுத்துரைக்கவும்.

• வாழ்க்கை துன்பங்கள், துயரங்கள் நிறைந்தது.

• ஆசையே துன்பங்களுக்கான காரணம்.

• ஆசையைத் துறந்துவிட்டால் துன்ப துயரங்களைப் போக்கிவிடலாம்.

• சரியான பாதையைப் பின்பற்றினால் (எண் வகை வழிகள்) ஆசைகளை வென்றுவிடலாம்.

 

4. பௌத்தத்தின் பிரிவுகளான ஹினயான, மகாயான பிரிவுகளிடையே உள்ள ஏதேனும் மூன்று வேறுபாடுகளை எழுதவும்.

ஹீனயானம் :  

• புத்தரின் சிலைகளையோ உருவப்படங்களையோ வணங்கமாட்டார்கள்.

• மிக எளிமையாக இருப்பர்.

• பிராகிருத மொழியைப் பயன்படுத்தினர்.

மகாயானம் :

• புத்தரின் உருவங்களை வணங்கினர்.

• விரிவான சடங்குகளைப் பின்பற்றினர். 

• சமஸ்கிருத மொழியைப் பயன்படுத்தினர். 

 

5. சங்ககாலத்தில் பௌத்தமும் சமணமும் செழித்தோங்கின. ஒவ்வொன்றுக்கும் ஏதாவது இரண்டு சான்றுகளைத் தருக.

சமணம் : 

• அறவோர் பள்ளி என்பது சமணத்துறவிகள் வாழ்ந்த இடங்கள் என மணிமேகலையில் குறிப்பு உள்ளது.

• கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும் வழியில் சமண பெண் துறவியான கவுந்தியடிகள் அவர்களை ஆசீர்வதித்து அவர்களுடன் சென்றதாக தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

பௌத்தம் :

• சங்க காலத்திற்குப் பின்னர் இயற்றப்பட்ட இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பௌத்த இலக்கியமாகும்.

• கி.பி. ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார். அசோகரால் கட்டப்பட்ட 100 அடி உயரமுள்ள ஸ்தூபியை அவர் பார்த்தார்.

 

VIII. உயர் சிந்தனை வினா

 

1. கர்மா - ஒரு மனிதனின் செயல்கள். ஏதாவது 10 நல்ல செயல்களைக் குறிப்பிடுக.

• தேவையில் இருக்கின்ற நண்பனுக்கு உதவுதல்.

• உங்களின் முதல் நற்காரியம் பிறரன்புப் பணிக்காக (தர்மம்) இருக்கட்டும்.

• ஒரு மரம் நடுவோம்.

• பழைய அலைபேசியொன்றை தானம் செய்வோம்.

• இரத்ததானம் செய்வோம்.

• நம்மில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி அதன்மூலம் சிறந்த நபராக மாற தீர்மானிப்போம்.

• சுய கௌரவத்தை விழுங்கி, பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ செய்யப்பட்ட ஒரு செயலுக்காக மன்னிப்பு வேண்டுவோம்.

• பள்ளிக்கல்விக்குத் தேவையான பொருட்களை, உரிமைகளின் தேடலில் இல்லங்களில் வாழும் குழந்தைகளுக்கு வழங்குவோம்.

• தொலைபேசியில் உரையாடும்பொழுது இனிமையாக உரையாடுவோம். • உணவுப்பொருள் வாங்க வெளியே செல்கின்றபொழுது கூடுதலாக ஒரு பொருளை வீடற்ற ஒருவருக்கு அல்லது உணவுக் கூடத்திற்கு வழங்குவதற்காக வாங்குவோம்.

 

IX. மாணவர் செயல்பாடு

1 ஜாதகக் கதைகளில் ஒன்றை வாசிக்கவும். அதை நீயே சொந்தமாக எழுதவும்.

2. கீழ்க்கண்ட தலைப்புகளில் ஓர் அட்டவணை தயார் செய்யவும்.


3. கீழ்க்காணும் வார்த்தைகளை பொருத்தமான கட்டத்திற்குள் இடவும்.

 

வார்த்தைகள் : ஜினா, மகாயானா, தீர்த்தங்கரர்கள், ஸ்தூபிகள், நிர்வாணா, திகம்பரர், திரிபிடகங்கள் ஆகமசித்தாந்தம்.

சமணம்

ஜினா

தீர்த்தங்கரர்கள்

திகம்பரர்

ஆகம சித்தாந்தம் 

பௌத்தம்

மகாயானா

ஸ்தூபிகள் நிர்வாணா

திரிபிடகங்கள்

 

4. தகவல் அட்டை தயாரித்தல் - செயல்பாடு

கீழ்க்காணும் மதங்கள் குறித்த செய்திகளைக் கொண்ட அட்டைகள் தயார் செய்யவும்.

இந்துமதம், கிறித்துவம், இஸ்லாம், சமணம், பௌத்தம்.

விடை :

இந்து மதம்

• தசாவதாரம்

• ருத்ர தாண்டவம் 

• மனுதர்மம் 

• சிவன் - விஷ்ணு 

• மகா கும்பமேளா

கிறித்துவம் : 

• சிலுவையில் அறைதல் 

• புனித கடல் (Holy Sea) 

• நாசரேத்

• மலைப்பொழிவு 

• 12 சீடர்கள்

இஸ்லாம் : 

• மெக்கா

• ஹிஜிரா 

• குரான்

• முகம்மது நபி

பௌத்தம் : 

• ஹீனயானம்

• புத்த கயா

• தமமம் 

• திரிபீடகம்

• ஸ்தூபிகள்

சமணம் 

• தீர்த்தங்கரர்கள் 

• சுவேதாம்பரர்

• அறவோர் பள்ளி 

• கவுந்தியடிகள்

• திரிரத்தினங்கள்

 

5. 'வென்' வரைபடம் மூலம் சமணத்துக்கும் பௌத்தத்திற்கும் இடையேயுள்ள ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகளைச் சுட்டிக்காட்டுக



6. குறுக்கெழுத்து புதிர்


இடமிருந்து வலம்

1. மூன்று ரத்தினங்களுள் ஒன்று

2. புத்தரின் போதனைகள் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன

3.ஒரு சிறந்த கல்வி மையம்

4. புத்தர் ஞானம் பெற்ற இடம்

5. எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது

வலமிருந்து இடம்

6. சித்தார்த்தரின் தாயார்

7. மனித வாழ்க்கையை அவரின் செயலே தீர்மானிக்கிறது

மேலிருந்து கீழ்

8. லும்பினி ------------- இல் உள்ளது

9. புத்த வழிபாட்டுக் கூடம்

10. பிறப்பு இறப்பு ஆகியவற்றில் இருந்து விடுதலை

11. கௌதம் சுவாமியால் தொகுக்கப்பட்ட சமணநூல்

 

X. வாழ்க்கைத் திறன்கள்.


 

XI . கட்டக வினாக்கள்


வெள்ளை நிற ஆடை அணிந்த சமணத் துறவிகள் ......... என அழைக்கப்பட்டனர்.

விடை : சுவேதாம்பரர்

‘தர்ம சக்கர பரிவர்தனா' உரை நிகழ்த்தியவர் யார்?

விடை : ஞானம்பெற்றவர்

புத்தரின் பல்வேறு பிறவிகள் பற்றிக் கூறுகிற மிகப் பழமையான பௌத்த நூல் எது?

விடை : மகாவீரர் 

புத்தர் என்பதன் பொருள் என்ன ?

விடை : புத்தர்

பௌத்தத்தில் எத்தனை பேருண்மைகள் உள்ளன?

விடை : நான்கு

தமிழ்நாட்டில் சமண மடாலயங்கள் | இருந்த ஏதேனும் 4 இடங்களைக் கூறுக.

விடை பௌத்தம் 

சமணத்தின் 24வது தீர்த்தங்கரர் யார்?

விடை ஜாதகக்கதைகள்

 எந்த மதத்தின் போதனைகள் நான்கு பேருண்மை களையும் எட்டு நெறிகளையும் கொண்டுள்ளன?

விடை புகார், உறையூர், மதுரை, காஞ்சி

இரட்டைக் காப்பியங்களில் ஒன்றின் பெயரைக் குறிப்பிடுக.

விடை சிலப்பதிகாரம்

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 2 அலகு 2 : மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்