பருவம் 2 அலகு 2 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 6th Social Science : Civics : Term 2 Unit 2 : The Constitution of India

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 2 அலகு 2 : இந்திய அரசமைப்புச் சட்டம்

வினா விடை

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 2 அலகு 2 : இந்திய அரசமைப்புச் சட்டம் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

பயிற்சிகள்

 

I. சரியான விடையை தேர்வு செய்க:

 

1. அரசமைப்புத் தினம் கொண்டாடப்படும் நாள் -----------------

அ) ஜனவரி 26

ஆ) ஆகஸ்டு 15

இ) நவம்பர் 26

ஈ) டிசம்பர் 9

[விடை: இ) நவம்பர் 26]

 

2. அரசமைப்புச் சட்டத்தை ----------------- ஆம் ஆண்டு அரசியல் நிர்ணயசபை ஏற்றுக்கொண்டது.

அ) 1946

ஆ) 1950

இ) 1947

ஈ) 1949

[விடை: ஈ) 1949]

 

3. அரசமைப்புச் சட்டத்தில் இதுவரை ------------------- சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

அ) 101

ஆ) 100

இ) 78

ஈ) 46

[விடை: அ) 101]

 

4. இஃது அடிப்படை உரிமை அன்று ----------------

அ) சுதந்திர உரிமை

ஆ) சமத்துவ உரிமை

இ) ஓட்டுரிமை

ஈ) கல்வி பெறும் உரிமை

[விடை: இ) ஓட்டுரிமை]

 

5. இந்தியக் குடிமக்களின் வாக்குரிமைக்கான -------------- வயது

அ) 14

ஆ) 18

இ) 16

ஈ) 21

[விடை: ஆ) 18]

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:


1. அரசியல் நிர்ணய சபையின் தலைவராக முனைவர். ராஜேந்திர பிரசாத் தேர்ந்/தெடுக்கப்பட்டார்.

2. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்தந்தை என போற்றப்படுபவர் அண்ணல் அம்பேத்கர்

3. நம் அடிப்படை உரிமைகளை உறுதிசெய்யவும் பாதுகாக்கவும் செய்வது  அரசமைப்புச் சட்டம்   ஆகும்.

4. நம் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் 26 ஜனவரி 1950

 

III. பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.


1. சுதந்திர தினம் - அ. நவம்பர் 26

2. குடியரசு தினம் - ஆ. ஏப்ரல் 1

3. இந்திய அரசமைப்பு தினம் - இ. ஆகஸ்டு 15

4. அனைவருக்கும் கல்வி உரிமை - ஈ.ஜனவரி 26

1 2 3 4

அ)  இ  அ  ஈ  ஆ

ஆ)  இ  ஈ  அ ஆ

இ) ஈ ஆ அ இ

விடை : ஆ)  இ  ஈ  அ  ஆ

 

IV. தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு விடையளி.

 

1. அரசமைப்பு நிர்ணய சபை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

அரசமைப்பு நிர்ணய சபை 1946-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

 

2. வரைவுக் குழுவில் எத்தனை உறுப்பினர்கள் பங்கேற்றனர்?

வரைவுக் குழுவில் எட்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

 

3. அரசமைப்பு நிர்ணய சபையில் பங்கேற்ற பெண் உறுப்பினர்கள் எத்தனை பேர்?

15 பெண் உறுப்பினர்கள் இந்த அமைப்பில் இடம் பெற்றிருந்தனர்.

 

4. அரசமைப்புச் சட்ட உருவாக்கம் எப்போது முடிவடைந்தது?

• அரசமைப்புச் சட்ட உருவாக்கம் 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் முடிவடைந்தது.

 

V. பின்வரும் வினாக்களுக்கு விடையளி:

 

1. ஜனவரி 26 குடியரசு தினமாக ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?

• 1929 - ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டில் முழு சுயராஜ்யத்தை அடைவது என்ற முழக்கம் வலுப்பெற்றது.

• அதனைத் தொடர்ந்து 1930, ஜனவரி 26 அன்று முழு சுதந்திர நாளாகக் கொண்டாடப்பட்டது.

• பின்னாளில் அதுவே நமது குடியரசு தினமாக ஆனது.

 

2. அரசமைப்புச் சட்டம் என்றால் என்ன?

• அரசமைப்புச் சட்டம் ஒரு நாட்டிற்குத் தேவையான சில அடிப்படை விதிகள், கொள்கைகளை உருவாக்கி ஆவணப்படுத்துகிறது.

• தனது குடிமக்களின் உரிமைகள், கடமைகள் மற்றும் செயல்பாடுகளை வரையறுக்கிறது.


3. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிறப்பம்சங்களைப் பட்டியலிடுக.

• இந்திய அரசமைப்புச் சட்டம்தான் நமது நாட்டின் உயர்ந்த பட்ச சட்டமாக விளங்குகிறது.

• அது அடிப்படை அரசியல் கொள்கைகளை வரையறுப்பதோடு அரசு நிறுவனங்களின் கடமைகளைப் பட்டியலிடுகிறது.

• குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளை நிர்ணயம் செய்கிறது.

• வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குகிறது.

• இந்திய அரசமைப்புச் சட்டம் ஓர் ஒட்டுமொத்தக் கட்டமைப்பை நமக்குத் தருகிறது.

 

4. அடிப்படை உரிமைகள் என்றால் என்ன?

“ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகத் தேவையான உரிமைகளே அடிப்படை உரிமைகள் என்று அழைக்கப்படுகின்றன.” அவை

• சம உரிமை

• சுதந்திரமாக செயல்படும் உரிமை

• சுரண்டலுக்கு எதிரான உரிமை

• சுதந்திர சமய உரிமை

• கலாச்சார மற்றும் கல்வி பெறும் உரிமை

• சட்டத்தீர்வு பெறும் உரிமை

 

5. நீ செய்ய விரும்பும் கடமைகளைப் பட்டியலிடுக.

• தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் மதித்து நடப்பது

• நாட்டுக்காகத் தேவைப்படும் போது சேவை செய்ய தயாராக இருப்பது

• நமது பழம் பெருமை மிக்க பாரம்பரியத்தை காப்பது

• வன்முறையைத் தவிர்த்து அரசு சொத்துக்களை பாதுகாப்பது

• குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்புகளை 6-14 வயதுக்குள் தருவது.

 

6. முகப்புரை என்றால் என்ன?

“அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரைதான் முகப்புரை என்று அழைக்கப்படுகிறது"

 

7. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்களின் மூலம் நீ புரிந்து கொள்வது என்ன ?

• சுதந்திரம் என்றால் விடுதலை. தான் செய்ய வேண்டிய செயலைத் தானே முடிவு செய்யும் சுதந்திரம்

• சமத்துவம் என்றால் அனைத்து மக்களுக்கும் சமத்துவ பொருளாதார, நிலை, சமத்துவ வாய்ப்பு அளித்தல்.

• சகோதரத்துவம் என்றால் சகோதரத் தன்மை .

 

8. வரையறு : இறையாண்மை

ஒரு நாட்டின் உச்சநிலை அதிகாரத்தையே இறையாண்மை என்கிறோம்.

 

VI. செயல்பாடுகள்:

 

1. மாணவர்கள் தனித்தனியாகவோ அல்லது குழுவாகவோ தங்கள் வகுப்புக்கான விதிமுறைகளைத் தயாரித்தல். பின்பு அவற்றிலிருந்து வகுப்புக்கான விதிகளின் தொகுப்பை உருவாக்குதல்.

• வகுப்பறையில் முழுமையான கவனத்தை செலுத்தவும்.

• அனைவரையும் மதிக்க வேண்டும்.

• அமைதியான வேலையை செய்ய வேண்டும்

• நமது பொருட்களை பத்திரமாக கையாள வேண்டும்.

• மற்றவர்கள் கூறுவதை காது கொடுத்து கேள். 

 

2 வீடு பள்ளி, சமூக அளவில் உன் உரிமைகளையும் பட்டியலிடுக.

• காலம் தவறாமல் பள்ளிக்கு செல்லுதல்

• புதிய கற்கும் வாய்ப்பினில் பங்கு பெறுதல்

வீடு

• பெற்றோரை கௌரவப்படுத்தல்

• .சின்ன, சின்ன உதவிகள் செய்தல்

சமுகம்

• பொது உடைமைகளை பாதுகாத்தல்

• கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு கற்பித்தல்

 

3. சமத்துவம், குழந்தைத்தொழிலாளர் அனைவருக்கும் கல்வி பெறும் உரிமை இத்தலைப்புகளைப் பற்றி கலந்துரையாடுக.

• அனைவரும் சமமாக நடத்தப்படவேண்டும்.

• யாருக்கும், எதற்காகவும் முன்னுரிமை வழங்க கூடாது.

குழந்தை தொழிலாளர் :

• குழந்தைகளை கட்டாயப்படுத்தி ஒரு வேலையில் ஈடுபடவைப்பது அவர்கள் குழந்தைதனத்தை இழக்க நேரிடும்

கல்விபெறும் உரிமை :

• இது ஒரு அடிப்படை உரிமையாகும்.

• ஒவ்வொரு குடிமகனும், மொழி, இனம், மதம், வயது என்ற வேற்றுமையை கடந்து பெற வேண்டிய முக்கிய உரிமையாகும்.


4. அமைதிக்கான நோபல் பரிசு (2014) இந்தியாவை சேர்ந்த கைலாஷ் சத்தியார்த்திக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யுசூப்சாய்க்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது—இவர்களின் பணிகளைக் கேட்டறிக.

 

VII வாழ்வியல் திறன்


1. உனக்குக் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளுள் உனக்குப் பிடித்தமானது எது? ஏன்?

2. இந்திய அரசமைப்புச் சட்டம் நமக்கான உரிமைகளையும் கடமைகளையும் வழங்கியுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் குறித்து எண்ணங்களைப் பகிர்க.

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 2 அலகு 2 : இந்திய அரசமைப்புச் சட்டம்