அலகு 7 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - கண்டங்களை ஆராய்தல் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா | 8th Social Science : Geography : Chapter 7 : Exploring Continents: Africa, Australia and Antarctica
அலகு -7
கண்டங்களை ஆராய்தல் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா

கற்றலின்
நோக்கங்கள்
>ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் அண்டார்டிகா கண்டங்களின் புவியியல்
அமைவிடங்களைக் கண்டறிதல்
>இக்கண்டங்களின் இயற்கையமைப்பு, காலநிலை மற்றும் வடிகாலமைப்பு பற்றி
அறிந்து கொள்ளல்
>இக்கண்டங்களின் தாவர மற்றும் விலங்கினங்களின் தன்மைகளைப் புரிந்து
கொள்ளல்
>முக்கிய வளங்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை அடையாளம் காணல்
>வரைபட திறனை வளர்த்தல்
அறிமுகம்
எட்டாம்
வகுப்பு ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்த பின் மாணவர்களிடம் எதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்
என வினவினார். அதற்கு அவ்வகுப்புத் தலைவன் ஆசிரியரிடம் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா
இடையேயான ஒருநாள் மட்டைப்பந்து போட்டி குறித்து மாணவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்
எனக் கூறினான். அதற்கு ஆசிரியர், 'மாணவர்களிடம், சரி இன்று இவ்விரு கண்டங்களைப் பற்றிப்
பல விவரங்களை இப்பாடத்தில் கற்போம்' என்று கூறினார்.