Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | குடும்பம்: யூஃபோர்பியேசி [ஆமணக்கு குடும்பம் / கள்ளிக் குடும்பம்]

வகைப்பாட்டு நிலை, பொதுப் பண்புகள், மலர் சூத்திரம், பொருளாதார முக்கியத்துவம் - குடும்பம்: யூஃபோர்பியேசி [ஆமணக்கு குடும்பம் / கள்ளிக் குடும்பம்] | 11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany

11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்

குடும்பம்: யூஃபோர்பியேசி [ஆமணக்கு குடும்பம் / கள்ளிக் குடும்பம்]

யூஃபோர்பியேசி குடும்பத்தில் 214 பேரினங்களும் ஏறத்தாழ 5600 சிற்றினங்களும் உள்ளன. இக்குடும்பத்தாவரங்கள் உலக அளவில் பரவிக்காணப்பட்டாலும், குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் அதிக அளவில் காணப்படுகின்றன.

குடும்பம்: யூஃபோர்பியேசி [ஆமணக்கு குடும்பம் / கள்ளிக் குடும்பம்]

(APG வகைப்பாட்டின்படி பெரேஸி, ஃபில்லாந்தேஸி, பிக்ரோடெண்ட்ரேஸி குடும்பங்கள், யூஃபோர்பியேசியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன)

வகைப்பாட்டு நிலை



பொதுப்பண்புகள்

பரவல்: யூஃபோர்பியேசி குடும்பத்தில் 214 பேரினங்களும் ஏறத்தாழ 5600 சிற்றினங்களும் உள்ளன. இக்குடும்பத்தாவரங்கள் உலக அளவில் பரவிக்காணப்பட்டாலும், குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் அதிக அளவில் காணப்படுகின்றன.

குடும்பம்: லில்லியேசி (லில்லி குடும்பம்)

வளரியல்பு: பெரும்பாலும் புதர்ச்செடிகள் (ரிஸினஸ் கம்யூனிஸ், ஜட்ரோஃபா காஸிப்பிஃபோலியா) மரம் (எம்பிளிக்கா அஃபிஸினாலிஸ்), சிறு செடிகள் (ஃபில்லாந்தஸ் அமாரஸ்), பின்னுக்கொடிகள் (ட்ராஜியா இன்வலுக்கரேட்டா), சில வறண்ட நிலத் தாவரங்கள் (யூஃபோர்பியா காக்டஸ் தாவரங்களை ஒத்திருக்கும். பொதுவாக எல்லாத் தாவரங்களிலும் பால்போன்ற அல்லது நீர்மத் திரவம் (Latex) காணப்படும்.

வேர்: நன்கு கிளைத்த ஆணிவேர்த் தொகுப்பு.

தண்டு: நிலத்தின் மேல் காணப்படும் தண்டினை உடையது, நிமிர்ந்தது அல்லது நிலம் படர்ந்தது (யூஃபோர்பியா புரோஸ்ட்ரேட்டா), மென்மையானது அல்லது கட்டைத்தன்மையுடையது. யூஃபோர்பியாவின் பலசிற்றினங்களில் தண்டு தட்டையாக இலை போன்று சதைப்பற்றுள்ளவையாக உருமாற்றம் அடைந்துள்ளது. இத்தகைய உருமாற்றம் ஃபில்லோகிளேடு எனப்படும். உருண்டையானது, கிளைத்தது, திடமானது, (அ) உள்ளீடற்ற குழாயுடையது. வழக்கமாகப் பால் போன்ற லேட்டக்ஸ் (யூ. திருக்கள்ளி) அல்லது நீர்ம லேட்டக்ஸ் (ஜட்ரோஃபா குர்கஸ்) காணப்படுகிறது.

இலை: இலையடிச் செதிலுடையது அல்லது செதிலற்றது. பெரும்பாலும் தனி இலை, மாற்றிலையடுக்கமைவு. யூஃபோர்பியாவின் பல சிற்றினங்களில் இலைகள் குறுக்கமடைந்து சிறுத்தோ, உதிர்ந்தோ விடுகின்றன. (ரிஸினஸ் கம்யூனிஸ்) அங்கைவடிவ மடல்களையுடையன. (மானிஹாட்) ஆழமான மடல்களையுடையது. யூஃபோர்பியா ஸ்ப்லென்டென்ஸ் இலையடிச் செதில்கள் இணையான முட்களாக மாறியுள்ளன. ஜட்ரோஃபா குர்காஸ் இலையடிச் செதில்கள் உரோமச் சுரப்பிகளாக மாறியுள்ளன. யூஃபோர்பியா பல்செரிமாவில் (பால் பெருக்கி மரம்) சையாத்தியம் மஞ்சரியைச் சூழ்ந்துள்ள இலைகள் கவரும் வண்ணமுடன் காணப்படுகின்றன. நடுநரம்பிலிருந்து கிளைத்த அல்லது பல இணைபோக்கமைந்த நரம்புகளிலிருந்து கிளைத்த வலைப்பின்னல் நரம்பமைவு.

மஞ்சரி: யூஃபோர்பியேசி தாவரங்களில் பலதரப்பட்ட மஞ்சரிகள் காணப்படுகின்றன.

நுனி ரசீம் (=நுனிவளர் மஞ்சரி) குரோட்டன், ரிஸினஸ், கேட்கின் (=தொங்கு கதிர்) அக்காலிஃபா ஹிஸ்பிடா, சைம் (=நுனிவளரா மஞ்சரி)

ஜட்ரோஃபா. தனித்த இலைக்கோண மலர் – ஃபில்லாந்தஸ் அஸ்பருலேடஸ் சையாத்தியம் யூஃபோர்பியா சிற்றினங்கள், பெடிலான்தஸ்

மலர்: பூவடிச்செதிலுடையவை, பூக்காம்புச் செதிலற்றவை. பூவிதழ்கள் ஓரடுக்குடையவை. அரிதாக ஈரடுக்குடையவை. ஆண்-பெண் மலர்த்தாவரங்கள் அல்லது ஒருபால் மலர்த்தாவரங்கள், ஆரச்சீருடையவை, அரிதாக இருபக்கச் சீருடையவை, மேல்மட்டச் சூலகப்பை அரிதாகச் சூலகஞ்சூழ் மலர் (ப்ரைடீலியா).

பூவிதழ் வட்டம்: பூவிதழ்கள் 0 முதல் 5 குரோட்டன் ஸ்பார்சிஃபுளோரஸ் தாவர ஆண்மலர்களில் பூவிதழ் இரண்டு அடுக்கங்களில் அமைந்துள்ளது, மலர்கள் ஓரடுக்கு பூவிதழ்களுடனோ அல்லது பூவிதழ்கள் அற்றோ (யூஃபோர்பியா), காணப்படும். தொடுஇதழ்அமைவு அல்லது தழுவு இதழ் அமைவு காணப்படுகிறது. இணையாத பூவிதழ்கள் அல்லது இணைந்த பூவிதழ்கள்.

மகரந்தத்தாள் வட்டம்: ஒன்று முதல் பலவாக அமைந்துள்ளது. யூஃபோர்பியா தாவரத்தில் ஒவ்வொரு மகரந்தத்தாளும் ஒரு ஆண்மலரைக் குறிக்கும். ரிஸினஸ் தாவரத்தில் 5 மகரந்தத்தாள்கள் உள்ளன. ஆனால் அவை ஒவ்வொன்றும் பல கிளைகளாகக் கிளைத்தும் காணப்படுகிறது. ஜட்ரோஃபா தாவரத்தில் இரண்டு அடுக்குகளில் அடுக்கிற்கு 5 மகரந்தத்தாள் என்று அமைந்துள்ளது. மகரந்தப்பைகள் இரு மடல்களையுடையவை. மகரந்தப்பையானது குறுக்காகவோ, நீள்வாக்கிலோ வெடிக்கின்றது.

சூலக வட்டம்: மூன்று இணைந்த சூலக இலைகளாலானது, இரண்டு சூலக இலைகள் (ப்ரைடீலியா), நான்கு அல்லது (ட்டீரோகாக்கஸ்), ஐந்து சூலக இலைகள் (வைலேண்டியா) இக்குடும்பத்தில் காணப்படுகின்றன. மேல்மட்டச் சூலகப்பையுடையவை, சூலகப்பையுடையவை, ஒவ்வொரு சூலக அறையிலும் ஒன்று அல்லது இரண்டு சூல்கள் அச்சு சூல்ஒட்டுமுறையில் அமைந்துள்ளது. மூன்று சூலகஅறைகள், சூலகத்தண்டு 3, ஒவ்வொன்றும் இரண்டாகக் கிளைத்துத் தூவிகளை உடைய சூல்முடிகளைக் கொண்டுள்ளது. பெரும்பாலும் தேன்சுரப்பிகள் காணப்படுகிறது. ஆண்மலர்களில் மலட்டுச் சூலகங்கள் உள்ளன.

கனி: பெரும்பாலும் பிளவுறுகனிகள். இது அதிக விசையுடன் வெடித்துப் பிளவுற்று ஒற்றை விதையைக் கொண்ட மூன்று காக்கஸ்களாகப் பிரியும். மூவறை பிரிகனி (ரெசினஸ்), உள்ஒட்டுசதைக்கனி (எம்ப்ளிகா அஃபிஸினாலிஸ்), மேலும் சதைக்கனி அல்லது சமாரா.

விதை: கருவூண் உடையது. ரிஸினஸ் விதையில் விதைத்துளையானது குமிழ் போன்ற விதை முண்டு (Caruncle) ஒன்றை உருவாக்கி அவற்றின் மூலம் தற்காலிகமாக நீரை உறிஞ்சி வைத்துக்கொண்டு விதை முளைத்தலுக்கு உதவுகின்றன.



ரிஸினஸ் கம்யூனிஸ் (ஆமணக்கு) கலைச்சொற்களால் விளக்கம்.

வளரியல்பு: உயரமான பல பருவப் புதர்ச் செடி.

வேர்: கிளைத்த ஆணிவேர்த் தொகுப்பு.

தண்டு: தரைமேல் தண்டு, நிமிர்ந்தது, உருளையானது, கிளைகள் உள்ளீடற்றவை. அடித்தண்டு கடினத் தன்மையுடையது வழவழப்பானது.

இலை: தனி இலை, இலைக்காம்புடையது, இலையடிச் செதிலற்றது. மாற்றிலைடுக்கமைவு, அகலமானது, அங்கைவடிவ மடல்களையுடையது, பொதுவாக 7 முதல் 9 மடல்களையுடையது. பற்கள் போன்ற விளிம்புடையது. அங்கைவடிவ விரி வலைப்பின்னல் நரம்பமைவு உடையது.

மஞ்சரி: நுனியில் காணப்படும் கூட்டு ரசீம் வகை.

ஆண் மலர்: பூவடிச்செதிலுடையவை, பூக்காம்புச் செதிலற்றவை, பூக்காம்புடையவை, ஆரச்சீருடையவை, முழுமையற்றவை.

பூவிதழ் வட்டம்: பூவிதழ்கள் 5, தனித்தவை, ஒரு வரிசையில் அமைந்துள்ளன. பசுமையானது, தொடு இதழ் அமைவில் இணைந்த இதழ்கள், ஒற்றைப் பூவிதழ் மலரின் அச்சுநோக்கிக் காணப்படும்.

மகரந்தத்தாள் வட்டம்: மகரந்தத்தாள்கள் எண்ணற்றவை மகரந்தத்தாள்கள் பல கிளைகளுற்று காணப்படுகின்றன. கோளவடிவ, கீழிணைந்த மகரந்தப்பைகள்.

சூலக வட்டம்: பொதுவாக இனப்பெருக்கத் தன்மையற்ற சூலகம் காணப்படும்.

பெண் மலர்: பூவடிச் செதில் உடையவை, பூக்காம்புச் செதிலற்றவை, பூக்காம்புடையவை, பெண்மலர்கள் (14 நாட்கள் மலர்ந்திருக்கும்) மஞ்சரியின் நுனிப்பகுதியில் அமைந்துள்ளன. ஆரச்சீருடையவை, முழுமையற்றவை, மேல்மட்டச் சூலகப்பையுடையவை.

பூவிதழ் வட்டம்: பூவிதழ்கள் 3, தனித்த பூவிதழ்கள் பசுமையானவை, தொடு இதழ் அமைவுடையவை.

மகரந்தத்தாள் வட்டம்: இனப்பெருக்கத் தன்மையற்ற மகரந்தத்தாள் (Staminode) காணப்படும்.

சூலக வட்டம்: மூன்று சூலக இலைகள் உள்ளன. இணைந்த சூலக இலைகள், மேல்மட்டச் சூலகப்பையுடையவை, தெளிவான மூன்று மடல்களையுடையது, மூன்று சூலறைகளையுடையது. சூலகத்தைச் சுற்றிலும் முள்போன்ற வளரிகள் காணப்படுகிறது. ஒவ்வொரு சூலறையிலும் ஒரு சூல் வீதம் அச்சு சூல் ஒட்டுமுறையில் சூல்கள் அமைந்துள்ளன. சூலகத் தண்டு 3, சூலக முடி இருகிளைகளுடன் தூவிகளையுடையது.

கனி: மூவறை பிரிகனி, முள்போன்ற வளரிகளையுடையது, கனி பிளவுற்று ஒற்றை விதையைக் கொண்டமூன்று காக்கஸ்களாகப் பிரியும்.

விதை: கருவூண் உடையது. ரிஸினஸ் விதையில் விதைத்துளை குமிழ்போன்ற விதைமுண்டு ஒன்றை உருவாக்கி, தற்காலிகமாக நீரை உறிஞ்சி வைத்துக் கொண்டு விதைமுளைத்தலுக்கு உதவுகின்றன.

மலர் வாய்ப்பாடு

ஆண்மலர்: 

பெண்மலர்: 

யூஃபோர்பியேசி குடும்பத்தின் பொருளாதார முக்கியத்துவம்.



 

11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்