Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | நார்த் தாவரங்கள்

அன்றாட வாழ்வில் தாவரங்கள் | பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நார்த் தாவரங்கள் | 6th Science : Term 3 Unit 5 : Plants in Daily Life

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 5 : அன்றாட வாழ்வில் தாவரங்கள்

நார்த் தாவரங்கள்

எந்த தாவரங்களில் இருந்து நமக்குத் தேவையான நார்கள் பெறப்படுகின்றனவோ, அவை நார் தரும் தாவரங்கள் என் அழைக்கப்படுகின்றன. இவை நூல், கயிறு, துணி மற்றும் காகிதம் போன்றவை தயாரிக்கப் பயன்படுகின்றன. இத்தகைய இயற்கை நார்கள் எனப்படுகின்றன.

நார் தரும் தாவரங்களை நாம் பயன்பாட்டின் அடிப்படையிலும், தாவரத்தின் எப்பகுதியில் இருந்து நார் கிடைக்கிறது என்ற அடிப்படையிலும் பின்வருமாறு பிரிக்கலாம்.

பயன்பாட்டின் அடிப்படையில்

1. நெசவு நார்கள் (துணி நெய்ய உதவும் நார்கள் ) (எ.கா) பருத்தி

2 கயிறு நார்கள் (கயிறு தயாரிக்க உதவும் நார்கள் (எ.கா) தென்னை

3. நிரப்பும் நார்கள் (மெத்தைகள் தயாரிக்க உதவும் நார்கள்) (எ.கா) இலவம் பஞ்சு

கிடைக்கப்பெறும் தாவர பாகங்களின் அடிப்படையில்

1. விதைகளின் மேற்புறத்தூவி நார்கள் (எ.கா) பருத்தி

2 தண்டு அல்லது தண்டிழை நார்கள் (எ.கா) ஆளி, சணல்

3. இலை நார்கள் (எ.கா) கற்றாழை

4 உரிமட்டை நார்கள் (எ.கா) தேங்காய்

செயல்பாடு 4 : சிறிய பஞ்சு உருண்டை ஒன்றை எடுத்துக்கொள். அதைப் படத்தில் காட்டியவாறு கைகளினால் பிடித்து மெதுவாக இழுத்துப் பார்த்தால் அது சுருள்கிறது. இப்படிச் சுருளும்போது உங்களால் ஒரு நூலை உருவாக்க முடிகிறதா?

நூலிழைகளிலிருந்து நூலை உருவாக்கும் முறை நூல் நூற்றல் எனப்படுகிறது.

இந்தியாவில் மேற்கு வங்காளம், அஸ்ஸாம், ஒடிசா, பீகார், உத்திரப்பிரதேசம், திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய ஏழு மாநிலங்களில் சணல் பயிரிடப்படுகின்றது. மேற்கு வங்காளம் மட்டும் இந்திய சணல் உற்பத்தியில், 50 விழுக்காடு உற்பத்தி செய்கிறது. 

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 5 : அன்றாட வாழ்வில் தாவரங்கள்