Home | 11 ஆம் வகுப்பு | 11வது புவியியல் | களப்பணி மற்றும் அறிக்கை தயாரித்தல்

அறிமுகம் - புவியியல் - களப்பணி மற்றும் அறிக்கை தயாரித்தல் | 11th Geography : Chapter 13 : Field Work and Report Writing

11 வது புவியியல் : அலகு 13 : களப்பணி மற்றும் அறிக்கை தயாரித்தல்

களப்பணி மற்றும் அறிக்கை தயாரித்தல்

களப்பணி என்பது "இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட சூழ்நிலைச் சார்ந்த தகவல்களை உற்றுநோக்கல் மூலம் சேகரிப்பது" என்பதாகும்.

களப்பணி மற்றும் அறிக்கை தயாரித்தல்

அத்தியாயக் கட்டகம்

13.1 அறிமுகம்

13.2 களப்பணியின் தேவை

13.3 களப்பணி செயல்பாடுகள்

13.4 களப்பணி அறிக்கை

 

கற்றல் நோக்கங்கள்

• புவியியல் சார்ந்த களப் பணியின் அவசியத்தை அடையாளம் காணுதல்

• தகவல் சேகரிக்கும் திறனை பெறுதல்

• நிலவரைபடத்தை படித்தறியும் திறன் (field sketching) மற்றும் கள சுருக்கப்படம் வரையும் திறனை அதிகரித்தல்

• குழுவாக இணைந்து செயல்படும்

திறனை வளர்த்துக் கொள்ளுதல்.

• அறிக்கை தயாரிக்கும் திறனை மேம்படுத்துதல்.


அறிமுகம்

புவியியலாளர்களுக்கான கற்றல் பகுதியானது பரந்து காணப்படுகிறது. புவியியல் கற்கும் மாணவர்கள் புவியைப் பற்றிய அறிவினை வகுப்பறைக் கற்றல், புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், நிலவரைபடங்கள், இணையதளம் போன்றவற்றின் மூலம் பெறுகின்றனர். பாடப்பொருள் சார்ந்த அறிவை வகுப்பறை கற்றல் மூலம் மாணவர்கள் பெறுகின்றனர். ஆனால் செய்முறை சார்ந்த அறிவினை களப்பணி ஆய்வு மூலமாக மட்டுமே முழுமையாக பெற முடியும்.

களப்பணி என்பது "இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட சூழ்நிலைச் சார்ந்த தகவல்களை உற்றுநோக்கல் மூலம் சேகரிப்பதுஎன்பதாகும். புவியியல் இரண்டு முதன்மை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அவை .

1) இயற்புவியியல்

2) மானிடப் புவியியல் அல்லது கலாச்சார புவியியல்

 

களப்பணி புவியியல் மாணவர்களுக்கான பாடம் சார்ந்த தெளிவான புரிதல் ஏற்பட உதவுகிறது. இயற்புவியியலை புரிந்துகொள்ள களப்பணி மிக முக்கியமானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் உள்ளது.



11 வது புவியியல் : அலகு 13 : களப்பணி மற்றும் அறிக்கை தயாரித்தல்