Home | 7 ஆம் வகுப்பு | 7வது அறிவியல் | தீ அணைப்பான், தீயணைப்பானின் வகைகள்

அன்றாட வாழ்வில் வேதியியல் | மூன்றாம் பருவம் அலகு 4 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - தீ அணைப்பான், தீயணைப்பானின் வகைகள் | 7th Science : Term 3 Unit 4 : Chemistry in Daily Life

7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 4 : அன்றாட வாழ்வில் வேதியியல்

தீ அணைப்பான், தீயணைப்பானின் வகைகள்

ஒரு தீயணைப்பு கருவியானது காற்று அல்லது எரிபொருளின் வெப்பநிலையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றின் விநியோகத்தையும் துண்டித்துவிடுகிறது.

தீ அணைப்பான்:


ஒரு தீயணைப்பு கருவியானது காற்று அல்லது எரிபொருளின் வெப்பநிலையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றின் விநியோகத்தையும் துண்டித்துவிடுகிறது.

தீயை அணைக்கும் கருவிகள் எவ்வாறு செயல்படுகின்றன?

தீயை அணைக்கும் கருவிகள், எரியும் எரிபொருளை குளிர்விக்கின்றது, ஆக்ஸிஜனை வினைபுரியாமல் தடுத்தல் அல்லது அகற்றுதல் மற்றும் வேதிவினை நிகழாமல் தடுத்தல் போன்ற விளைவுகளைச் செய்கிறது. அதனால், தொடர்ந்து எரிய முடியாமல் தீ தடுக்கப்படுகிறது. தீ அணைப்பானின் கைப்பிடியை அழுத்தப்படும்போது, அது திறந்து, உயர் அழுத்த வாயுக்கள் உள்ளறையில் (canister) பிரதான சிலிண்டரிலிருந்து ஒரு சிப்பான் ( siphon) குழாய் வழியாக வெளியேறி தீயை கட்டுப்படுத்துகிறது. ஒரு தீ அணைப்பான் மருந்து, தெளிப்பான் கருவிபோல செயல்படுகிறது. 


தீயணைப்பானின் வகைகள்:

வெவ்வேறு வகையான அணைப்பான்கள் பல்வேறு வகையான தீயைச் கட்டுப்படுத்துகின்றன. அவற்றில் தீயை அணைக்கும் பொருள்களின் பொதுவான வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

     l. காற்று அழுத்த நீர் அணைப்பான்கள், 

II. கார்பன்-டை-ஆக்சைடு அணைப்பான். 

III. உலர் ரசாயன தூள் அணைப்பான்கள்


தீயனைப்பான் ஐந்து வகையாக வகைப்படுத்தப்டுகிறது அவை

1. நீர்

2. நுரை

3. உலர்ந்த வேதித்துகள்கள்

4. CO2

5. நீர்ம இரசாயனங்கள் 


நெருப்பின் வகுப்புகள்

ஐந்து வகையான நெருப்பு வகுப்புகள் : வகுப்பு A, வகுப்பு B, வகுப்பு C, வகுப்பு D, மற்றும் வகுப்பு E.


வகுப்பு A – மரம், காகிதம் மற்றும் துணி போன்ற எரியக்கூடிய திடப்பொருட்களால் ஏற்படுகிறது 

வகுப்பு B  – பெட்ரோல், டர்பெண்டைன் அல்லது பெயிண்ட் போன்ற எரியக்கூடிய  திரவப்பொருட்களால் ஏற்படுகிறது 

வகுப்பு C  – ஹைட்ரஜன், பியூட்டேன் அல்லது மீத்தேன் போன்ற எரியக்கூடிய  வாயுப்பொருட்களால் ஏற்படுகிறது 

வகுப்பு D  –  எண்ணெய்யால் ஏற்படும் தீ. 

வகுப்பு E  –  மின்சார தீ விபத்துகள் - மின்சார உபகரணங்களால் ஏற்படும் தீ

மின்சார நெருப்பு   மின் உபகரணங்கள்: மின் பொருள் அகற்றப்பட்டதும், நெருப்பு வகுப்பை மாற்றுகிறது


பல்வேறு வகையான அணைப்பான்கள் பல்வேறு வகையான தீயை அணைக்கின்றன




7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 4 : அன்றாட வாழ்வில் வேதியியல்