Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | வழி முறைகளை உருவாக்குதலும் பின்பற்றுதலும்

தகவல் செயலாக்கம் | பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு - வழி முறைகளை உருவாக்குதலும் பின்பற்றுதலும் | 6th Maths : Term 3 Unit 5 : Information Processing

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : தகவல் செயலாக்கம்

வழி முறைகளை உருவாக்குதலும் பின்பற்றுதலும்

இயந்திர மனிதன் விளையாட்டினைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஒரு குழந்தை இயந்திர மனிதனாக நடிக்க மற்றொரு குழந்தை, இயந்திர மனிதனாக நடிக்கும் குழந்தைக்கு அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இயந்திர மனிதனாக நடிக்கும் குழந்தை அந்த அறிவுறுத்தல்களை அப்படியே செயல்படுத்த வேண்டும்.

வழி முறைகளை உருவாக்குதலும் பின்பற்றுதலும்

இயந்திர மனிதன் விளையாட்டினைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஒரு குழந்தை இயந்திர மனிதனாக நடிக்க மற்றொரு குழந்தை, இயந்திர மனிதனாக நடிக்கும் குழந்தைக்கு அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இயந்திர மனிதனாக நடிக்கும் குழந்தை அந்த அறிவுறுத்தல்களை அப்படியே செயல்படுத்த வேண்டும். இயந்திர மனிதனாக நடிக்கும் குழந்தை சுவரைப் பார்த்தபடி அதன் அருகில் நிற்கிறார் எனில் அறிவுறுத்தல்களை இடுபவர் 'முன்னே செல்', என்று கூறினால் இயந்திர மனிதனாக நடிக்கும் குழந்தை முன்னோக்கிச் செல்ல முயல வேண்டும்.


ஆனால் அது முடியாது. இயந்திர மனிதனாக நடிக்கும் குழந்தை "அப்படிப் போகமுடியாது" எனக் கூறக் கூடாது. இயந்திர மனிதனால் அறிவுறுத்தல்கள் இயந்திரத் தனமாகப் பின்பற்றப்படும் என்பதனை இந்த வேடிக்கையான செயல் நமக்குத் தெரிவிக்கிறது. இயந்திர மனிதன் போல் இல்லாமல் மனித மூளை வழிமுறைகளைச் சூழ்நிலைக்குத் தக்கவாறு சிந்திக்கவும், மேம்படுத்தவும் கூடிய திறனுடையது


இந்தச் சூழல் குறித்துச் சிந்திக்க

ஒரு குழுவில் உள்ள 6 உறுப்பினர்களுக்கு எலுமிச்சைப் பழச்சாறு தயாரிப்பதற்கான செய்முறை 

ஒரு கிண்ணத்தில் மூன்று அரைத் துண்டு எலுமிச்சைப் பழங்களைப் பிழிந்து கொள்க

அத்துடன் ஐந்து குவளை தண்ணீரைக் கிண்ணத்தில் சேர்த்துக் கொள்க.

இந்த எலுமிச்சைச் சாற்றுடன் நான்கு தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்க்கவும்

இந்தக் கலவையை நன்றாகக் கலக்கவும்.

எலுமிச்சைச் சாற்றை வடிகட்டவும்.

வடிகட்டிய சாற்றை ஆறு குவளைகளில் ஊற்றவும், பரிமாறவும்.

மேலே கூறிய அறிவுறுத்தல்களைப் பயன்படுத்தி 12 உறுப்பினர்களுக்கு, 24 உறுப்பினர்களுக்கு மற்றும் 36 உறுப்பினர்களுக்கு எலுமிச்சைப் பழச் சாற்றைத் தயாரிக்கவும்


எடுத்துக்காட்டு 2 கொடுக்கப்பட்ட புதிரில் உள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அனைவரும் ஒரே எண்ணை (36) பெறுக.

அறிவுறுத்தல்கள்:

● 1 முதல் 9 வரையிலான ஏதேனும் ஓர் எண்ணை நினைத்துக் கொள்க.

அதனை 9ஆல் பெருக்குக.

ஈரிலக்க எண் கிடைத்தால் அவ்விலக்கங்களைக் கூட்டுக.

கூடுதலில் இருந்து 3 கழிக்க.

வரும் எண்ணை அதே எண்ணால் பெருக்குக.

தீர்வு

6 என்ற எண்ணை எடுத்துக்கொள்ளவும்.

அதனை 9ஆல் பெருக்குக : 9 × 6 = 54

கூடுதலின் இலக்கங்களைக் கூட்டுக : 5 + 4 = 9 

விடையிலிருந்து 3 ஐக் கழிக்க : 9 – 3 = 6 

அதே எண்ணால் பெருக்குக : 6 × 6 = 36

6 ஐத் தவிர வேறு எண்களுக்கு முயற்சி செய்க.


எடுத்துக்காட்டு 3 OMR தாளை நிரப்புவதற்கு முன், அறிவுறுத்தல்களை நீங்கள் கவனமாகப் படிக்கவும், கொடுக்கப்பட்ட OMR தாளில் பின்வரும் அறிவுறுத்தல்களின்படி நிழலிடுக.

அறிவுறுத்தல்கள் :

பந்துமுனை எழுது கோலை மட்டுமே பயன்படுத்தி வட்டங்களை நிழலிடுக

மேல் வரிசையில் சேர்க்கை எண்ணை எழுதவும்.

எண்கள் இடமிருந்து வலமாக நிழலிடப்பட வேண்டும்.

ஒவ்வொரு எண் கட்டத்திற்கும் கீழே உள்ள அதற்குரிய வட்டத்தை நிழலிடுக.

ஒவ்வொரு நிரலிலும் ஒரே ஓர் எண் மட்டுமே நிழலிடப்பட வேண்டும்.

தீர்வு


இச்செயல்பாடானது தேசியத் திறனறித் தேர்வு (NAS), தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை தேர்வு (NMMS) போன்ற பல்வேறு தேர்வுகளுக்கு OMR தாளை நிரப்புவதற்குத் தேவைப்படுகிறது.


எடுத்துக்காட்டு 4 

கொடுக்கப்பட்ட 4 × 4 சதுரக் கட்டத்தை உற்றுநோக்குக, மேலும் கீழே கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி எண் வரிசை அடுக்குகளின் தனித்தன்மையானது 139 என்ற கூடுதலைத் தருகிறது என்பதனை அறிக.


அறிவுறுத்தல்கள்:

எண்களை (இடமிருந்து வலமாக) நிரை வாயிலாகக் கூட்டுக

எண்களை (மேலிருந்து கீழாக) நிரல் வாயிலாகக் கூட்டுக

எண்களை மூலை விட்டங்களின் வாயிலாகக் கூட்டுக.

சதுரத்தின் நான்கு மூலையில் உள்ள எண்களைக் கூட்டுக

கொடுக்கப்பட்ட சதுரத்தை நான்கு 2 × 2 சதுரங்களாகப் பிரித்து

ஒவ்வொரு சதுரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து எண்களையும் கூட்டுக.

மேலே கூறப்பட்ட அறிவுறுத்தல்கள் அனைத்தும் ஒரே விடையைத் தருகின்றன அல்லவா?

மேலே கூறப்பட்ட அனைத்து எடுத்துக்காட்டுகளிலும் அறிவுறுத்தல்களை வழங்குவதும் அதனைப் பின்பற்றுவதும் ஆர்வம் ஊட்டுவதாக இருப்பதைக் கவனிக்கவும்.


இவற்றை முயல்க


1) ஆசிரியர் தான் முன்பே வரைந்து வைத்திருக்கும் வடிவியல் உருவத்தை வரைய மாணவர்களுக்கு வாய்மொழி அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

ஒரு சதுரம் வரைக, சதுரத்தின் நடுவில் அதன் எந்தப் பக்கத்தினையும் தொட்டுச் செல்லாதவாறு ஒரு வட்டம் வரைக. அந்த வட்டத்தை நான்கு சமப் பகுதிகளாகப் பிரிக்க. அவ்வாறு பிரிக்கப்பட்ட வட்டத்தின் கீழே, வலதுபுறமாக உள்ள கால் பாகத்தை நிழலிடுக. மாணவர்கள் வரைந்த உருவத்தைக் காண்பிக்குமாறு கூறுக.

2) ஒரு தாளில் முக்கோணம் ஒன்று வரைக. அதனை விளையாட்டுத்தனமான உருவமாக மாற்றுக. உன் நண்பனிடம் இது போலவே வரைவதற்கான அறிவுறுத்தல்களை வழங்குக.

3) உன்னுடைய நண்பன் உன்னைச் சந்திப்பதற்கு வீட்டிற்கு வர விரும்புகிறார் எனில் அவர் வீட்டிலிருந்து உன் வீட்டை அடைவதற்கான வழியைத் தெளிவான அறிவுறுத்தல்களாகக் கூறுக.

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : தகவல் செயலாக்கம்