Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | வடிவமைப்பு குறியுருக்கள்

பைத்தான் - வடிவமைப்பு குறியுருக்கள் | 12th Computer Science : Chapter 8 : Core Python : Strings and String Manipulation

12 வது கணினி அறிவியல் : அலகு 8 : Core பைத்தான் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல்

வடிவமைப்பு குறியுருக்கள்

விடுபடு வரிசை பின் சாய்வுக் கோட்டை கொண்டு துவங்கும்.

வடிவமைப்பு குறியுருக்கள்



பைத்தான் விடுபடு வரிசை

விடுபடு வரிசை பின் சாய்வுக் கோட்டை கொண்டு துவங்கும். ஒற்றை மேற்கோள் குறியுடன் சரத்தை குறிப்பிடும் போது சரத்தில் உள்ள அனைத்து ஒற்றை மேற்கோள் குறிகளும் விடுபடும்.

எடுத்துக்காட்டு

# ஒற்றை மேற்கோள் குறியுடன் சரத்தை வெளியிடும் மூன்று மேற்கோள் குறிகளுக்குள் குறிப்பிடப்பட்டிருக்கும் சரம்

>>> print ('''They said, "What's there?"'")

They said, "What's there?"

# இரட்டை மேற்கோள்குறியுடன் தோன்றும் சரம் ஒற்றை மேற்கோள் குறிக்குள் விடுபடுவரிசையுடன்

>>> print ("They said, "What\'s there?'')

They said, "What's there?"

# இரட்டை மேற்கோள் குறியுடன் தோன்றும் சரம் இரட்டை மேற்கோள் குறிக்குள் விடுபடு வரிசையுடன்

>>> print ("They said, \"What's there?\'")

He said, "What's there?"

விடுபடு வரிசை : விளக்கம்

\newline - பின்சாய்வு மற்றும் புதிய வரி தவிர்த்தல்

\ \ -  பின்சாய்வு

\ ‘ - ஒற்றை மேற்கோள் குறி

\” - இரட்டை மேற்கோள் குறி

\a - ASCII மணி ஒலிப்பு

\b - ASCII பின்னிட வெளி

\f - ASCII படிவ செலுத்தி

\n - ASCII வரி செலுத்தி

\r - ASCII நகர்த்தி திருப்பி

\t - ASCII கிடைமட்ட தத்தல்

\v - ASCII செங்குத்து தத்தல்

\ooo - எண்ம எண்ணுடன் கூடிய குறியுரு

\Xhh - பதினறும எண்ணுடன் கூடிய குறியுரு

12 வது கணினி அறிவியல் : அலகு 8 : Core பைத்தான் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல்