Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

வரலாறு | சமூக அறிவியல் - தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் | 10th Social Science : History : Chapter 9 : Freedom Struggle in Tamil Nadu

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

காலனியாட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்ந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலேயே பாளையக்காரர்கள், தமிழ்நாட்டில் தங்கள் அரசியல் ஆதிக்கத்தை நிறுவ முயன்ற ஆங்கிலேயர்களின் முயற்சிகளை எதிர்த்தனர்.

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்


கற்றலின் நோக்கங்கள்

கீழ்க்காண்பனவற்றோடு அறிமுகமாதல்

 தமிழ்நாட்டில் காலனிய எதிர்ப்புப் போராட்டங்கள்

கல்வியின் வளர்ச்சிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கும் கிறித்தவ சமயப்பரப்பு நிறுவனங்களின் பங்களிப்பு

  தமிழ்நாட்டில் காங்கிரசின் அரசியலுக்கு நீதிக்கட்சியின் சவால்

தமிழ்நாட்டில் காங்கிரசின் போர்க்குணமிக்க வெகு மக்கள் இயக்கங்கள்


அறிமுகம்

காலனியாட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்ந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலேயே பாளையக்காரர்கள், தமிழ்நாட்டில் தங்கள் அரசியல் ஆதிக்கத்தை நிறுவ முயன்ற ஆங்கிலேயர்களின் முயற்சிகளை எதிர்த்தனர். பாளையக்காரர்களின் தோல்விக்குப் பின்னரும் கூட 1806இல் வேலூர் கோட்டையில் இந்திய வீரர்களும் அதிகாரிகளும் ஓர் எழுச்சியைத் திட்டமிட்டு நடத்தினர். அப்புரட்சி தென்னிந்தியாவின் பல இராணுவ முகாம்களிலும் எதிரொலித்தது. மேற்கத்திய கல்வி அறிமுகம் மற்றும் இறுதியில் தோன்றிய படித்த இந்திய நடுத்தர வர்க்கத்தின் தோற்றம் ஆகியவை ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தை அரசமைப்புப் பாதையில் எடுத்துச் சென்றது. தமிழ்நாட்டில் நடைபெற்ற விடுதலைப் போராட்டம் தனித்தன்மை வாய்ந்ததாகும். ஏனெனில் தொடக்கத்திலிருந்தே அது ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டமாக மட்டுமல்லாமல், தீங்கினை விளைவிக்கும் சாதிமுறை ஏற்படுத்தியிருந்த சமூகத் தடைகளிலிருந்து விடுதலை பெறுவதற்குமான போராட்டமாகவும் அமைந்தது. இப்பாடத்தில் தமிழ்நாட்டில் வெவ்வேறு கருத்தியல்களைப் பின்பற்றிய தேசியவாதிகள் வகித்த பாத்திரத்தை நாம் அறிந்து கொள்வோம்.

 

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்