Home | 11 ஆம் வகுப்பு | 11வது புவியியல் | புவியியலின் அடிப்படைகள்

11 வது புவியியல் : அலகு 1 : புவியியலின் அடிப்படைகள்

புவியியலின் அடிப்படைகள்

"புவியியல் பற்றிய படிப்பு என்பது நிலவரைபடத்தில் உள்ள இடங்களை நினைவுக் கொள்வதற்கும் மேலானது.

புவியியலின் அடிப்படைகள்

 

அத்தியாயக் கட்டகம்

1.1 அறிமுகம்

1.2 புவியியலை வரையறுத்தல்

1.3 புவியியலின் மரபுகள்

1.4 புவியியலின் கருப்பொருள்கள்

1.5 புவியியலுக்கும் இயற் மற்றும் சமூகஅறிவியலுக்கும் உள்ள தொடர்புகள்

1.6 புவியியல் கற்றலுக்கான அணுகுமுறைகள்

1.7 புவியியலின் பிரிவுகள்

1.8 புவியியல் கருவிகளும் திறன்களும்

1.9 தமிழ்நாட்டில் புவியியல் கல்வி

1.10 புவியியலை கற்பித்தல் மற்றும்கற்றலுக்கான புள்ளிவிவரங்கள்

 

அறிமுகம்

"புவியியல் பற்றிய படிப்பு என்பது நிலவரைபடத்தில் உள்ள இடங்களை நினைவுக் கொள்வதற்கும் மேலானது. இது உலகின் சிக்கல்களை புரிந்து கொள்வது மற்றும் கண்டங்களுக்கிடையே காணும் வேறுபட்ட கலாச்சாரத்தை போற்றுதல் ஆகும். முடிவில் இப்பாடம் வேறுபாடுகளைக் களைந்து மக்களை ஒன்றிணைக்கப் பயன்படும் ஓர் அறிவாகும்".

பராக் ஒபாமாமுன்னாள் அதிபர், USA.

கற்றல் நோக்கங்கள்

• புவியியலின் கருத்தை வரையறுத்தல்.

• புவியியலின் வளர்ச்சியைப் போற்றுதல்.

• புவியியலின் மரபு மற்றும் கருப்பொருளைப் புரிந்துகொள்ளுதல்.

• பிற பாடங்களுடனான புவியியலின் தொடர்பை அறிந்து கொள்ளுதல்.

புவியியல் அணுகுமுறைகளை கண்டறிதல்.

• புவியியல் பிரிவுகளை ஆய்வு செய்தல்.

• புவியியல் கருவிகள்திறன்கள் மற்றும் நோக்கங்களை போற்றுதல்.

 

பெரும்பாலான அறிவியல் பாடங்களின் மூல ஆதாரமாக புவியியல் விளங்குவதால் இது "அறிவியல்களின் தாய்என கருதப்படுகிறது. இது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படும் பாடமாகும். ஒரு அறிவாளி நூலகத்தின் மதிப்பைப் புரிந்துகொள்வதைப் போலஒரு நிதியாளர் பணத்தின் மதிப்பைப் புரிந்துகொள்வதைப் போலபெற்றோர் குழந்தைகளின் மதிப்பைப் புரிந்துகொள்வதைப்போல ஒரு புவியியலாளர் புவியின் மதிப்பையும் அது நமக்கு வழங்கும் வளங்களையும் புரிந்துகொள்கிறார்.







11 வது புவியியல் : அலகு 1 : புவியியலின் அடிப்படைகள்