Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | குறுகிய விடை தருக.

இந்தியாவின் சர்வதேச உறவுகள் | குடிமையியல் | சமூக அறிவியல் - குறுகிய விடை தருக. | 10th Social Science : Civics : Chapter 5 : India’s International Relations

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 5 : இந்தியாவின் சர்வதேச உறவுகள்

குறுகிய விடை தருக.

சமூக அறிவியல் : குடிமையியல் : இந்தியாவின் சர்வதேச உறவுகள் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: குறுகிய விடை தருக.

V. குறுகிய விடை தருக.

 

1. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக.

பாகிஸ்தான்

இலங்கை

வங்காள தேசம்

நேபாளம்

ஆப்கானிஸ்தான்

மாலத்தீவு

மியான்மர்

பூடான்

சீனா

 

2. போர்த் திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் (SPA) பற்றிய சிறு குறிப்பு வரைக.

இந்தியா, ஆப்கானிஸ்தான் உறவு போர்த்திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் (SPA) மூலம் வலிமை பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தம் ஆப்கானிஸ்தானின் உள் கட்டமைப்பை மறுசீரமைக்கவும், நிறுவனங்கள், வேளாண்மை, நீர், கல்வி, சுகாதாரம் மற்றும் வரியில்லாமல் இந்திய சந்தையை எளிதாக அடைதல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை நல்கவும் வழி கோலுகிறது.

 

3. பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

பிரேசில்

சீனா

ரஷ்யா

தென்னாப்பிரிக்கா

இந்தியா

 

4. கலடன் பன்முக மாதிரி போக்குவரத்துத் திட்டம் பற்றி நீவிர் அறிவது என்ன?

கொல்கத்தாவை மியான்மரில் உள்ள சிட்டவேயுடன் இணைப்பதற்காக சாலை நதி துறைமுகம் சரக்கு போக்குவரத்து திட்டமான கலடன் பன்முக மாதிரி போக்குவரத்து திட்டத்தினை இந்தியா உருவாக்கி வருகிறது.

தென்கடலில் பொருளாதார மண்டலத்தை உருவாக்குவதற்காக கொல்கத்தா நகரை கோசிமின் உடன் இணைக்கும் நோக்கம் கொண்ட ஒரு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

5. சாபஹார் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை மதிப்பிடுக.

சாபஹார் ஒப்பந்தம் எனப்படும் முக்கூட்டு ஒப்பந்தம் இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி சாபஹார் துறைமுகத்தைப் பயன்படுத்தி மூன்று நாடுகளிலும் போக்குவரத்து வழி தடங்கள் ஏற்படுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது.

இத்துறைமுகம் பாகிஸ்தானை தவிர்த்து ஆப்கானிஸ்தான் மற்றும் ஆசியா ஆகிய சந்தைகளை இந்தியா அணுக ஒரு நுழைவு வாயிலாக இருக்கும்.

 

6. இந்தியா உறுப்பினராக உள்ள ஏதேனும் ஐந்து உலகளாவிய குழுக்களைப் பட்டியலிடுக.

.பி.எஸ். (IBSA)

..எஸ் (EAS)

பி.சி..எம் (BCIM)

பி.பி..என் (BBIN)

எம்.ஜி.சி (MGC)

 

7. ஜப்பான் இந்தியா உற்பத்து நிறுவனத்தின் (JIM) பங்கு என்ன?

உற்பத்தித் துறையில் உற்பத்தி மற்றும் திறன் இந்தியா திட்டங்களில் பங்களிக்கவும் ஜப்பானிய உற்பத்தித் திறன்களை வழங்கி இந்தியாவின் உற்பத்தித் தொழில்துறை தளத்தை மேம்படுத்தவும் 30,000 இந்திய மக்களுக்கு பயிற்சி வழங்க ஜப்பான் இந்தியா உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

 

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 5 : இந்தியாவின் சர்வதேச உறவுகள்