இந்திய அரசமைப்பு | அரசியல் அறிவியல் - அருஞ்சொற்பொருள் | 12th Political Science : Chapter 1 : Constitution of India

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : இந்திய அரசமைப்பு

அருஞ்சொற்பொருள்

அரசியல் அறிவியல் : இந்திய அரசமைப்பு : அருஞ்சொற்பொருள்

அருஞ்சொற்பொருள்


v சட்டம்: ஒரு சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் ஈரவைகளிலும் ஏற்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெறும் போது சட்டம் எனப்படுகிறது.


v உட்பிரிவு: ஒரு சட்ட முன்வரைவில் வரிசை எண்ணிடப்பட்ட பத்தி.


v தீர்மானம்: நாடாளுமன்றத்தின் தீர்வு, நடவடிக்கை, கருத்து கோரி நாடாளுமன்றத்தில் எந்தவொரு உறுப்பினராலும் முன்வைக்கப்படுவது தீர்மானம் எனப்படும்


v பதவி பிராமணம்: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அமரும்முன் இந்திய அரசமைப்பிற்கும் நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கும் தமது உறுதிப்பாட்டினைத் தெரிவித்து கடவுள் பெயராலோ, பகுத்தறிவின் பெயராலோ உறுதி மொழி ஏற்றுக் கொள்வதாகும்.


v நிலைக்குழு: பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அல்லது அவ்வப்போது அவையால் தேர்ந்தெடுக்கப்படும் அல்லது அவைத் தலைவரால் நியமிக்கப்படும் குழு நிலைக்குழு எனப்படும்.


v அரசு: மத்திய அரசாங்கம், இந்திய நாடாளுமன்றம், மாநில அரசாங்கங்கள், மாநிலச் சட்டமன்றங்கள், இந்திய எல்லைக்குள் வரும் அனைத்து உள்ளூர் அதிகார அமைப்புகள், இந்திய அரசாங்கத்தின் கட்டுபாட்டின் கீழ் இயங்கும் அமைப்புகள் இவை அனைத்தையும் உள்ளடக்கியது அரசு ஆகும்.



12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 1 : இந்திய அரசமைப்பு