அமிலம் மற்றும் காரக் கரைசல்களின் வலிமை
pH
அளவீடு
கரைசலை, ஹைட்ரஜன் அயனிகளின் செறிவின் அடிப்படையில் அளவிடுதலே pH
அளவீடு எனப்படும். pH-இல் உள்ள p
என்பது ஜெர்மன் மொழியில் உள்ள
"பொட்டன்ஷ் என்ற வார்த்தையைக் குறிக்கிறது. இதன் பொருள் "அதிக ஆற்றல்" என்பதாகும். pH அளவீட்டில் 0 முதல் 14 வரை அளவிடப்படும். pH மதிப்புகள், ஒரு கரைசலின் அமிலத்தன்மை, காரத்தன்மை மற்றும் நடுநிலைத் தன்மை ஆகியவற்றை அடையாளம் காண உதவுகின்றன.
● அமிலத் தன்மை கொண்ட கரைசலின் மதிப்பு 7 ஐ விடக் குறைவாக இருக்கும்.
● காரத் தன்மை கொண்ட கரைசலின் மதிப்பு 7 ஐ விட அதிகமாக இருக்கும்.
● நடுநிலைத் தன்மை கொண்ட கரைசலின் மதிப்பு 7- க்குச் சமமாக இருக்கும்.