ஈரம் உறிஞ்சுதல்
சில சேர்மங்கள் சாதாரண
வெப்பநிலையில், வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும் போது அதிலுள்ள ஈரத்தை உறிஞ்சும்
தன்மையைப் பெற்றுள்ளன. இந்நிகழ்வின் போது அவற்றின் இயற்பியல் நிலை மாறுவதில்லை.
இத்தகைய சேர்மங்கள் ஈரம் உறிஞ்சும் சேர்மங்கள் அல்லது ஈரம் கவரும்
சேர்மங்கள் எனப்படுகின்றன. இப்பண்பிற்கு ஈரம் உறிஞ்சுதல் என்று பெயர்
ஈரம் உறிஞ்சும் சேர்மங்கள்
உலர்த்தும் பொருளாக பயன்படுத்தப்படுகின்றன.
உதாரணங்கள்
1. அடர் சல்பியூரிக்
அமிலம் (H2SO4).
2. பாஸ்பரஸ்
பெண்டாக்ஸைடு (P2O5)
3. சுட்ட சுண்ணாம்பு
(CaO).
4. சிலிக்கா ஜெல் (SiO2).