Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | நிறைகுறைப் போட்டி

பொருளாதாரம் - நிறைகுறைப் போட்டி | 11th Economics : Chapter 5 : Market Structure and Pricing

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 5 : அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும்

நிறைகுறைப் போட்டி

இது ஒரு முக்கியமான சந்தை வகையாகும், அங்கு தனிப்பட்ட நிறுவனங்கள் விலையின் மீது தங்கள் கட்டுப்பாட்டைப் பயன்படுத்துகின்றன.

நிறைகுறைப் போட்டி


நிறைகுறை போட்டி எனும் கருத்து 1933-ல் இங்கிலாந்து நாட்டின் ஜோன்ராபின்சன் (Joan Robinson) மற்றும் அமெரிக்காவின் E.H.சேம்பர்லின் (Chamberlin) ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அங்காடியில் ஒரு தனி நிறுவனம் விலையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும். 

இலக்கணம் : நிறைகுறைப் போட்டியில் எண்ணற்ற விற்பனையாளர், வேறுபடுத்தப்பட்ட பண்டத்தை விற்பர், நிறைவுப் போட்டி அங்காடிக்கு எதிர்மறையானது. அதன் பெயருக்கு ஏற்ப அங்காடியில் போட்டி இருக்கும்; ஆனால் நிறைகுறைப் போட்டியாக இருக்கும். 

விளக்கம் : நிறைகுறைப் போட்டி என்பது நிதர்சனமான உலகில் உள்ள போட்டியாகும். இன்று சில தொழிற்சாலைகள் மற்றும் விற்பனையாளர்கள் அதிக இலாபம் பெறும் நோக்கத்தில் போட்டியைத் தமக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்கிறார்கள். இந்த சந்தை அமைப்பில் விற்பனையாளர் தன் விருப்பத்திற்கிணங்க விலையை நிர்ணயித்து அதிக இலாபம் ஈட்டுகின்றனர்.

ஒரு விற்பனையாளர் அங்காடியில் தன் பண்டத்தை வேறுபடுத்திக் காட்டி விற்பதன் மூலம் பண்டத்தின் விலையை உயர்த்தி அதிக இலாபம் பெறுகிறார். அதிக இலாபத்தின் நிகழ்வால் புது விற்பனையாளர்கள் உள்ளே நுழைவதும், நட்டம் அடைந்த விற்பனையாளர்கள் அங்காடியை விட்டு வெளியேறுவதும் எளிதாகிறது.


11வது பொருளாதாரம் : அத்தியாயம் 5 : அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும்