பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - விலங்குலகம் | 6th Science : Term 1 Unit 5 : Living World of Animals

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 5 : விலங்குலகம்

விலங்குலகம்

நல்லூர் தேசியப்பள்ளி, அங்கு பயிலும் மாணவர்களை அருகிலுள்ள ஆனைக்காடு எனும் கிராமத்திற்கு களப்பயணம் அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்தது. கிராமத்திலுள்ள குளங்கள், அந்த ஓடைகள், பசுமையான வயல்வெளிகள், தென்னை மரங்கள் போன்றவற்றைப் பார்த்து மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அலகு 5

விலங்குலகம்



 

கற்றல் நோக்கங்கள்

பலவகையான விலங்குகள் உள்ளன என்பதனை அறிந்துகொள்ளல்.

விலங்குகள் மற்றும் தாவரங்களில் காணப்படும் பல்வகைத் தன்மைகளை அறிதல்.

ஒரு செல் மற்றும் பல செல் உயிரிகள் பற்றி அறிதல்.

வாழிடங்களின் அடிப்படையில் உயிரினங்களில் ஏற்பட்டுள்ள மாறுபாடுகளைத் தெரிந்து கொள்ளல்.

வாழிடத்திற்கேற்ப விலங்குகள் பெற்றுள்ள தகவமைப்புகளை அறிதல்.

உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்துள்ளன என்பதை அறிதல்.


 

அறிமுகம்

நல்லூர் தேசியப்பள்ளி, அங்கு பயிலும் மாணவர்களை அருகிலுள்ள ஆனைக்காடு எனும் கிராமத்திற்கு களப்பயணம் அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்தது. கிராமத்திலுள்ள குளங்கள், அந்த ஓடைகள், பசுமையான வயல்வெளிகள், தென்னை மரங்கள் போன்றவற்றைப் பார்த்து மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆசிரியரின் உதவியுடன் அவர்கள் உற்சாகமாக சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு மாணவன் இரண்டு பறவைகள் கூடு கட்டுவதைப் பார்த்தான். பறவைகள் எங்கே கூடுகட்டுகின்றன? ஏன்?

பூக்களைச் சுற்றி பலவகையான பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறப்பதை மாணவர்கள் பார்த்தார்கள். அங்கு காற்று தூய்மையானதாகவும், இளைப்பாறுவதற்கு ஏற்ப அமைதியாகவும் இருந்தது. அவர்கள் சற்று தொலைவில் ஓரளவு தண்ணீர் நிறைந்த குளத்தைப் பார்த்தார்கள், அடர்ந்த பச்சை நிறத் தாமரை இலைகள் நீரில் மிதப்பதைக் கண்டார்கள். அங்கே ஒரு பச்சைநிறத் தவளை ஒரு இலையிலிருந்து மற்றொரு இலைக்கு சத்தமிட்டுக்கொண்டே தாவியது. குட்டை வாலுடன் வெள்ளை நிறத்தில் முயல் ஒன்றை ஒரு சிறுமி கண்டாள். அந்தக் குழந்தைகள் பார்த்த விலங்குகளை உன்னால் பட்டியலிட முடியுமா? அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தனவா? அவை எந்த விதத்தில் ஒரே மாதிரியாக இருந்தன?

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 5 : விலங்குலகம்