Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | நீண்டகாலச் செலவுக் கோடு

பொருளாதாரம் - நீண்டகாலச் செலவுக் கோடு | 11th Economics : Chapter 4 : Cost and Revenue Analysis

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 4 : செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு

நீண்டகாலச் செலவுக் கோடு

நீண்டகாலத்தில் அனைத்து உற்பத்திக் காரணிகளும் மாறக் கூடியவை.

நீண்டகாலச் செலவுக் கோடு

நீண்டகாலத்தில் அனைத்து உற்பத்திக் காரணிகளும் மாறக் கூடியவை. நீண்டகாலத்தில் ஒரு நிறுவனம் தன் நிறுவன அளவை அதிகரித்துக் கொள்ள முடியும். எனவே நீண்டகாலத்தில் மாறாக் காரணி மற்றும் மாறாச் செலவுகள் இருக்க வாய்ப்பு இல்லை. நீண்ட கால சராசரி செலவுக் கோடு (LAC) வரைபடம் 4.9.-ல் காட்டப்பட்டுள்ளன.


நீண்ட கால சராசரி செலவு என்பது நீண்டகால மொத்தச் செலவை, மொத்த உற்பத்தி செய்யப்பட்ட அலகுகளால் வகுக்கப்படுவதால் பெறப்படும் செலவாகும். 

LAC = LTC / Q இதில் 

LAC = நீண்டகால சராசரி செலவு

LTC = நீண்டகால மொத்தச் செலவு 

Q = உற்பத்தி அளவு

நீண்டகால சராசரி செலவு வளைகோடானது பல குறுகிய கால சராசரி செலவு வளைகோடுகளிலிருந்து பெறப்பட்டதாகும். அதாவது குறுகியகால சராசரி செலவு வளைகோடுகளின் மிகத் தாழ்வான புள்ளிகளை ஒருங்கிணைத்து, நீண்ட கால சராசரி செலவு வளைகோடானது அமைந்துள்ளது. எனவே நீண்டகால சராசரி செலவு வளைகோடானது 'திட்ட வளைகோடு' அல்லது 'உறைவடிவ வளைகோடு' என்றும் அழைக்கப்படுகிறது.

தற்போதுள்ள செலவுக் கோட்பாடுகள் நீண்டகால சராசரி செலவுக் கோடு 'U' வடிவமாக இல்லாமல், 'L' -வடிவமாக இருக்கும் என்கின்றன. நீண்ட காலத்தில் ஆலையின் விரிவாக்கத்தினாலும், உற்பத்தி அதிகரிப்பினாலும், பொருளாதார சிக்கனங்களினாலும் ஒவ்வொரு அலகிற்கான உற்பத்திச் செலவு வேகமாக குறையும். இதனால் சராசாரி செலவுக் கோடு 'L' - வடிவமாக இருக்கும்.


11வது பொருளாதாரம் : அத்தியாயம் 4 : செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு