அலகு 7 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - காந்தவியல் | 8th Science : Chapter 7 : Magnetism

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 7 : காந்தவியல்

காந்தவியல்

கற்றல் நோக்கங்கள் இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:❖ காந்தம் மற்றும் அதன் வகைகள் பற்றி அறிந்துகொள்ளல்.❖ இயற்கை மற்றும் செயற்கைக் காந்தங்களை வேறுபடுத்துதல்.❖ காந்தப்புலத்தினை வரையறை செய்து சீரான மற்றும் சீரற்ற காந்தப்புலங்களை ஒப்பிடுதல்.❖ காந்தத்தின் பண்புகளைத் தொகுத்தல்❖ புவிக்காந்தம் பற்றிய கருத்தினைப் புரிந்துகொள்ளல்.❖ காந்தத்தின் பயன்களைப் பட்டியலிடுதல்.

அலகு 7

காந்தவியல்


 

கற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:

காந்தம் மற்றும் அதன் வகைகள் பற்றி அறிந்துகொள்ளல்.

இயற்கை மற்றும் செயற்கைக் காந்தங்களை வேறுபடுத்துதல்.

காந்தப்புலத்தினை வரையறை செய்து சீரான மற்றும் சீரற்ற காந்தப்புலங்களை ஒப்பிடுதல்.

காந்தத்தின் பண்புகளைத் தொகுத்தல்

புவிக்காந்தம் பற்றிய கருத்தினைப் புரிந்துகொள்ளல்.

காந்தத்தின் பயன்களைப் பட்டியலிடுதல்.


 

அறிமுகம்

இரும்பு, கோபால்ட், நிக்கல் போன்ற, உலோகங்களைக் கவரும் பண்பினைப் பெற்ற கல், உலோகம் அல்லது இதர பொருள்களே காந்தமாகும். காந்தத்தின் கவரும் பண்பே 'காந்தப்பண்பு' என் அழைக்கப்படுகிறது. இயற்கையானதாகவோ அல்லது செயற்கையானதாகவோ இருக்கலாம். மேலும், காந்தப் பண்புகளை விவரிக்கும் இயற்பியல் பிரிவு 'காந்தவியல்' அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் மெக்னிசியா என்று அழைக்கப்படும் ஆசியா மைனர் பகுதியில் காந்தங்கள் கிடைத்ததாக அறியப்பட்டுள்ளது. கி.மு (பொ.ஆ.மு) 200 க்கு முன்பே காந்தத்தின் பண்புகளை சீனர்கள் அறிந்திருந்தனர் என்று நம்பப்படுகிறது. கி.பி (பொ.ஆ.பி) 1200 இல் அவர்கள் காந்தத்தினை திசைகாட்டியாகப் பயன்படுத்தியுள்ளனர். காந்தத்தினை திசைகாட்டியாகக் கொண்டு, எளிமையாக நீண்டதூர கடல் பயணத்தினை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். காந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் உலகம் புதிய திசையை நோக்கி முன்னேறியது. நம் அன்றாட வாழ்வில் காந்தங்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. குளிர்ப் பதனிகள், கணினிகள், மகிழுந்து இயந்திரங்கள், மின்உயர்த்திகள் மற்றும் பிற சாதனங்களில் காந்தங்கள் பயன்படுகின்றன. இப்பாடத்தில் காந்தத்தின் வகைகள், பண்புகள் மற்றும் பயன்களைப் பற்றி பயில இருக்கின்றோம்.

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 7 : காந்தவியல்